Hyd house News Banner USA

Great News ! 'ஹீரோ', 'தம்பி' படங்களுக்கு அடித்த 'ஜாக்பாட்'

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ திரைப்படமும் கார்த்தி, ஜோதிகா நடித்துள்ள தம்பி திரைப்படமும் இன்று ( டிசம்பர் 20 ) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இரு படங்களுக்கும் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

Holiday advantages for Karthi's Thambi and Sivakarthikeyan's Hero

இந்நிலையில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழா உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் நாளை முதல் ஜனவரி 1 வரை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஒரு வாரம் கல்லூரிகளுக்கு விடுமுறை என்பதால் திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்த வாரம் வெளியாகியுள்ள ஹீரோ, தம்பி, சல்மான்கானின் தபங் 3 ஆகிய படங்களுக்கு கூடுதல் சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது.

Entertainment sub editor