பாசிட்டிவிட்டிக்கு காரணம்.. நான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி பாராட்டும் ஹீரோ இவர்!
முகப்பு > சினிமா செய்திகள்நான் சிரித்தால் படத்தின் உதவி இயக்குநரை ஹிப்ஹாப் ஆதி பாராட்டியுள்ளார்.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் உருவான திரைப்படம் நான் சிரித்தால். அறிமுக இயக்குநர் இராணா இயக்கிய இத்திரைப்படத்தில் ஐஷ்வர்யா மேனன், கே.எஸ்.ரவிகுமார், ரவி மரியா, படவா கோபி உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். சுந்தர்.சி தயாரித்த இத்திரைப்படம் காமெடி ஜானரில் உருவாகி கடந்த வாரம் வெளியாக ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில் நான் சிரித்தால் படத்தில் உதவி இயக்குநராக வேலை பார்த்த ஹரிஷ் துரைராஜ் என்பவரை ஆதி பாராட்டியுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'இவர் டைரக்ஷன் டீமில் வேலை பார்ப்பவர். படக்குழுவை எப்பொழுதும் சந்தோஷமாகவும் பாசிட்டிவாகவும் வைத்திருப்பதற்கு இவர் ஒருநாளும் தவறியதில்லை. அந்த பாசிட்டிவ் எனர்ஜி படமாக்கும் போது அற்புதங்கள் செய்ததை நான் அறிவேன். எந்த பாராட்டையும் எதிர்பாராது பலரின் வெற்றிக்காக உழைக்கும் இவர் போன்ற இளைஞர்களே ஹீரோ' என அவர் பதிவிட்டுள்ளார்.