பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் நம்ம 'ஹீரோ' சிவகார்த்திகேயன் திடீர் சந்திப்பு - விவரம் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'ஹீரோ' படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க, யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Hero Sivakarthikeyan wished Salman Khan for Dabangg 3

இந்த படத்துக்க ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அதே போல் பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தபங் 3. இந்த படத்தை தமிழில் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தமிழில் வெளியிடுகிறது. 'ஹீரோ' மற்றும் தபங் 3 ஆகிய இரண்டு படங்களும் டிசம்பர் 20 ஆம் தேதி வெளியாகிறது. எனவே இரண்டு ஹீரோக்களும் படங்களின் வெற்றி பெற வேண்டி வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.