விஷால் - யுவன் கூட்டணியின் 'சக்ரா'.. மிரட்டலான முன்னோட்டம் இதோ.! - தெறி டெக்னிக்கல் த்ரில்லர் Soon.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஷால் நடிக்கும் சக்ரா படத்தில் இருந்து முன்னோட்ட காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. 

விஷால் - யுவன் கூட்டணியின் சக்ரா ஒரு முன்னோட்டம் | here is the glimpse of trailer from vishal, yuvan's chakra

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஷால். இவர் தற்போது எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் சக்ரா திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் ஷ்ரதா ஶ்ரீநாத், ரெஜினா கெசான்ட்ரா உள்ளிட்டோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். 

இந்நிலையில் சக்ரா படத்தில் இருந்து முன்னோட்ட காட்சியை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. மிரட்டலான டெக்னாலஜி த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் சக்ரா படத்தின் முன்னோட்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஷால் - யுவன் கூட்டணிக்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களின் வரவேற்பு கிடைத்து வருவதால், சக்ரா திரைப்படமும் மேலும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

விஷால் - யுவன் கூட்டணியின் 'சக்ரா'.. மிரட்டலான முன்னோட்டம் இதோ.! - தெறி டெக்னிக்கல் த்ரில்லர் SOON. வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

விஷால் - யுவன் கூட்டணியின் சக்ரா ஒரு முன்னோட்டம் | here is the glimpse of trailer from vishal, yuvan's chakra

People looking for online information on Chakra, MS Anand, Vishal, Yuvan Shankar Raja will find this news story useful.