www.garudabazaar.com

Harish Kalyan Wedding : ஹரிஷ் கல்யாண் திருமணம்.. தாலி கட்டிய தருணம்.. TRENDING PHOTOS!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஹரிஷ் கல்யாண்,  திருமணம் சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

Harish Kalyan marries Narmada Udayakumar wedding Photos

Also Read | பொங்கலுக்கு துணிவு.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்! போடு வெடிய

பிக்பாஸ்  முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமடைந்த ஹரிஷ் கல்யாண் அடுத்தடுத்து படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் இளம் கதாநாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவருடைய நடிப்பில் பியார் பிரேமா காதல், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு மற்றும் ஓ மணப் பெண்ணே ஆகிய திரைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

Harish Kalyan marries Narmada Udayakumar wedding Photos

தற்போது ஹரிஷ் கல்யாண் 'டீசல்' என்ற பெயரில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும்  இந்த படத்தில் அதுல்யா ரவி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடங்காதே படத்தை இயக்கிய ஷண்முகம் முத்துசாமி இந்த படத்தை இயக்குகிறார்.

மேலும் சசி இயக்கத்தில் 'நூறு கோடி வானவில்' என்ற படத்திலும் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார். இப்படத்தில் சித்தி இத்னானி, கதாநாயகியாக நடிக்கிறார். பாலாஜி காப்பா, அருண் அருணாச்சலம் தயாரிக்கும் இப்படத்துக்கு சித்து குமார் இசையமைக்கிறார். பிரசன்னா குமார் ஒளிப்பதிவு செய்கிறார். கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடிந்த நிலையில் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது.

Harish Kalyan marries Narmada Udayakumar wedding Photos

சிலநாட்களுக்கு முன் தனது திருமண நிச்சயதார்த்தம் குறித்து ஹரிஷ் கல்யாண் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு அறிவித்திருந்தார்.   அதில் நர்மதா உதயகுமார் என்ற பெண்ணை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்தார்.

இந்நிலையில் நடிகர் ஹரிஷ் கல்யாண், சென்னை திருவேற்காட்டில் உள்ள GPN பேலஸ் மஹாலில் காலை 9  - 10.30 மணியளவில் நர்மதா உதயக்குமாரை திருமணம் செய்துள்ளார். இரு வீட்டார் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள் மற்றும் ஏராளமான நண்பர்கள், உறவினர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

Harish Kalyan marries Narmada Udayakumar wedding Photos

சிவப்பு நிற பட்டுப் புடவை அணிந்து மணப்பெண்ணும் பட்டு வேட்டி சட்டையில் மணமகனும் திருமண கோலத்தில் காட்சியளித்தனர்.  அருந்ததி பார்ப்பது மிஞ்சி அணிவித்தல் போன்ற சடங்குகள் நடைபெற்றன. மணப்பெண்ணுக்கு மணமகன் ஹரிஷ் கல்யாண் அன்பு முத்தமும் கொடுத்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

Also Read | Kantara: முதல்நாள் 10 தியேட்டர்.. 4 வது வாரத்தில் 150.. தமிழகத்தில் 'காந்தாரா' வேறலெவல் சம்பவம்

தொடர்புடைய இணைப்புகள்

Harish Kalyan marries Narmada Udayakumar wedding Photos

People looking for online information on ஹரிஷ் கல்யாண் திருமணம், Harish Kalyan, Harish Kalyan marries Narmada Udayakumar, Harish Kalyan Wedding, Harish Kalyan wedding photos will find this news story useful.