'தாராள பிரபு' படத்தை தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டிங்களா ? - அப்போ உங்களுக்கு தான் இந்த அறிவிப்பு
முகப்பு > சினிமா செய்திகள்ஸ்பெர்ம் டொனேஷனை மையமாக வைத்து ஹரிஷ் கல்யாண் நடித்திருந்த 'தாராள பிரபு' கடந்த மார்ச் 13 ஆம் தேதி வெளியாகியிருந்தது. ஹிந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'விக்கி டோனர்' பட தமிழ் ரீமேக்கான இதனை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடிக்க, விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு செல்வகுமார் எஸ்கே ஒளிப்பதிவு செய்ய கிருபாகரன் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார்
இந்த படத்தின் பாடல்களுக்கு அனிருத், பரத் சங்கர், இன்னோ கெங்கா, கபேர் வாசுகி, Madly Blues, Oorka - the band, ஷான் ரோல்டன், விவேக் - மெர்வின் உள்ளிட்டோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் பின்னணி இசையை பரத் சங்கர் அமைத்துள்ளார்.
இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டதன் காரணமாக படத்துக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. ஊரடங்கு முடிந்த பிறகு இந்த படம் மீண்டும் திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டநிலையில் தற்போது புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படத்தை அமேசான் பிரைமில் வருகிற ஏப்ரல் 9 ஆம் தேதி முதல் காணலாம்.