www.garudabazaar.com

பிக்பாஸ் சாண்டி வீட்டில் விசேஷம்... வெளியான ஹேப்பி நியூஸ்.. வாழ்த்து தெரிவிக்கும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராக இருப்பவர் சாண்டி. சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது நடனத்தால் கலக்கிய இவர், ரஜினியின் காலா படத்தில் நடன இயக்குநராக அசத்தினார். பின்பு பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார் நடன அமைப்பாளர் சாண்டி.  அந்நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையால் மக்களின் மனதை கட்டிப்போட்டார். மேலும் சினிமா பாடல்களை ரீமிக்ஸ் செய்து அங்கு நடந்த செயல்களை வைத்து அவர் பாடுவதற்கு பல ரசிகர்கள் இருந்தனர்.   தனது நகைச்சுவையான பேச்சால் இவர் தமிழகமெங்கும் பலருக்கு ஃபேவரைட் ஆனார்.அதே போல் அந்நிகழ்ச்சியின் மூலம் அவரை விடவும் அவரது மகள் லாலா மிகவும் பிரபலமானார்.

happy news from biggboss sandy household சாண்டியின் வீட்டில் நடந்த விசேஷம்

நடன அமைப்பாளரான சாண்டி தற்போது தமிழ் சினிமாவில் பிசியான நபராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவரது நடன அமைப்பில் உருவான கர்ணன், பாரிஸ் ஜெயராஜ், குட்டி பட்டாசு ஆல்பம் போன்ற பல பாடல்கள் வரிசையாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வெற்றி அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது நடன அமைப்பாளர் சாண்டியின் வீட்டில் தற்பொழுது மகிழ்ச்சியான விஷயம் நடந்துள்ளது. அவரது மனைவி இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார். மேலும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்த செய்தியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Tags : Sandy

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

happy news from biggboss sandy household சாண்டியின் வீட்டில் நடந்த விசேஷம்

People looking for online information on Sandy will find this news story useful.