Reliable Software
www.garudabazaar.com

Video: "நோட்ஸ் துல்லியமா வாசிக்குறாப்டி.. இவர கண்டா வரச்சொல்லுங்க..".. ஜி.வி.பிரகாஷ் வைரல் பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இசையமைப்பாளராக அறியப்பட்டு பின்னாட்களில் நடிகராகவும் வலம் வரத் தொடங்கியவர் ஜி.வி.பிரகாஷ். இவரது மெலோடி, கிராமியம் என வெரைட்டி பாடல்களுக்கு ரசிகர்கள் ஏராளம் உள்ளனர்.

GV Prakash shared a talented person plays instrument video

இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ், தெருக்களில் பூம் பூம் மாட்டுடன் வாசித்துக் கொண்டிருந்த ஒரு நபரது வீடியோவைக் கண்டு வியப்படைந்துள்ளார். அந்த வீடியோவை பற்றி தமது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ் குமார், “இவரை கண்டுபிடிக்க முடியுமா பாருங்கள். நாம் இவரை ரெக்கார்டிங்கிற்கு பயன்படுத்த முடியும். மிகவும் திறமையாகவும் நோட்ஸில் துல்லியமாகவும் வாசிக்கிறார். திறமையானவர்! இந்த வீடியோவை சமூகவலைதளத்தில் பார்த்தேன்!” என குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராக வெற்றிமாறனின் அசுரன், சுதா கொங்காராவின் சூரரைப் போற்று திரைப்படங்களுக்காக அண்மையில் பெரிதாக பேசப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் வெற்றிமாறன் சூர்யா கூட்டணியில் உருவாகும் வாடிவாசல் படத்துக்கான இசைப் பணிகளை தொடங்கியுள்ளார்.  இதனிடையே எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் வணக்கம்டா மாப்ளே திரைப்படம் அண்மையில் சன் நெக்ஸ்டில் நேரடியாக வெளியானது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "எண்ணற்ற ஆசீர்வாதங்களுக்கு நன்றி".. பாடகி ஸ்ரேயா கோஷல் வீட்ல நல்ல விஷயம்.. உருக்கமான ட்வீட்!

மேலும் செய்திகள்

GV Prakash shared a talented person plays instrument video

People looking for online information on GV Prakash, GV Prakash Kumar will find this news story useful.