www.garudabazaar.com

ஆசம்!! ரக்‌ஷன் பாட்டுக்காக.. டிஸ்கோ டிரெஸ்ல நம்ம GP முத்து வேற லெவல் நடன ஒத்திகை! Video

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மைக்காலமாகவே விஜய் டிவி பிரபலங்கள் பலரும் ஆல்பம் பாடல்களில் பிசியாகி வருகின்றனர்.

GP Muthu viral rehearsal Enna Vazhka Da rakshan sunitha video

முன்னதாக கவின் நடித்த அஸ்குமாரோ பாடலையும் சிவாங்கி பாடி நடித்திருந்தார். இந்த ஆல்பம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. விஜய் டிவி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமான அஸ்வின், சிவாங்கி உள்ளிட்டோர் இணைந்து வெளியிட்ட அடிபொலி ஆல்பம் அண்மையில் வைரலானது. அஸ்வின் நடித்த இந்த பாடலை சிவாங்கி பாடியிருந்தார்.

இதேபோல், அஸ்வின் குட்டி பட்டாஸ் என்கிற பாடலில் நடித்து இருந்தார். இந்த குட்டி பட்டாஸ் ஆல்பம் பாடலை உருவாக்கிய அதே படக்குழுவினர் அசுரன் பட புகழ் கென் கருணாஸ் மற்றும் பாடகி கிரேஸ் கருணாஸ் ஆகியோரின் ‘வாடா ராசா’ பாடலையும் உருவாக்கியது. இந்த பாடல்கள் அனைத்தும் இதுவரை வெளியாகி வந்தன.

இந்த நிலையில்தான் விஜய் டிவி ரக்‌ஷன், சுனிதா மற்றும் ஸ்வதிஷ்தா ஆகியோரின் நடிப்பில் உருவானது ‘என்னா வாழ்க்க டா’ பாடல். நடிகர் ரக்‌ஷன், துல்கர் சல்மான் நடித்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் படம் முழுவதும் நடித்திருந்தார். நடிகராக ரக்‌ஷன் தமது நடிப்பை இந்த படம் மூலமாக பதித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ‘என்னா வாழ்க்கடா’ ஆல்பம் பாடலில் ஆடி நடித்துள்ளார்.

டாங் லி ஜம்போ இயக்கிய இந்த பாடலுக்கு கணேசன் இசையமைத்திருந்தார். அ.ப.ராஜா இந்த பாடலை எழுதி இருந்தார். பென்னி தயாள் மற்றும் வ்ருஷா இந்த பாடலை பாடி இருந்தனர். அண்மையில் வெளியான இந்த பாடலை பல பிரபலங்கள் வெளியிட்டிருக்கின்றனர்.  ‘சரிகம’ ஆடியோ கம்பெனி இந்த பாடலை வெளியிட்டது. குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற சுனிதா இந்த பாடலில் நடித்துள்ளார்.

சாண்டி மாஸ்டர் நடன பயிற்சி அளித்து இந்த பாடலில் ஆடியிருந்தார். இந்த பாடலில் இடம்பெற்ற இன்னொரு முக்கிய பிரபலம்தான் ஜி.பி.முத்து. யூடியூபில் லெட்டர் படிப்பதன் மூலம் பிரபலமான ஜி.பி.முத்து தற்போது எல்லா இடங்களிலும் பேசப்பட்டு வருகிறார். முன்னதாக சன்னி லியோன் நடிக்கும் திரைப்படத்தில் ஜி.பி.முத்து நடித்து வந்திருந்தார்.

இதேபோல் தற்போது யோகி பாபு மற்றும் ஓவியா நடிக்கும் கான்ட்ராக்டர் நேசமணி திரைப்படத்தில் ஜி.பி.முத்து இணைந்திருக்கிறார். முன்னதாக பிக்பாஸ் 5வது நிகழ்ச்சி தொடங்கப்பட இருக்கும் செய்தி வெளியானது முதலே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி.முத்து கலந்து கொள்வாரா என்கிற பேச்சு இருந்து வந்தது.

வரும் அக்டோபர் 3-ஆம் தேதி முதல் மாலை 6 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகவிருக்கும் நிலையில் ஜி.பி.முத்து இதில் பங்கேற்பாரா என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்தது. இதனிடையே தான் ஜி.பி.முத்து தன்னுடைய மனைவி, குழந்தைகள் மற்றும் செல்போனை பிரிந்து இருக்க முடியாது என்பதால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது கடினம் என்று அவரே விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில் பல படங்களிலும், பாடல்களிலும் நடிப்பதில் ஜி.பி.முத்து ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி “என்னா வாழ்க்கடா” பாடலில் ஜி.பி.முத்து கலக்கலான காஸ்ட்யூம் போட்டு நடனம் ஆடி இருக்கிறார். அவருக்கு மாஸ்டர் நடன பயிற்சி அளிக்கும் வீடியோவை பார்க்க முடிகிறது. இந்த வீடியோவில் கலக்கலான டிஸ்கோ வகையான டிரஸ் அணிந்து ஜி.பி.முத்து நடன ஒத்திகைகளை மேற்கொள்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஆசம்!! ரக்‌ஷன் பாட்டுக்காக.. டிஸ்கோ டிரெஸ்ல நம்ம GP முத்து வேற லெவல் நடன ஒத்திகை! VIDEO வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

GP Muthu viral rehearsal Enna Vazhka Da rakshan sunitha video

People looking for online information on EnnaVazhkaDa, GP MUTHU, Trending will find this news story useful.