www.garudabazaar.com

Keerthy Suresh தந்த சூப்பர் அப்டேட்.. வருது அறிவிப்பு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பழங்குடியின பெண்ணாக  கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள குட்லக் சகி படத்தின் ரிலீஸ் தேதியை தனது ட்விட்டர் பக்கத்தில் கீர்த்தி சுரேஷ் அறிவித்தார்.

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் முன்னனி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். மகாநடி என்ற திரைப்படத்தில் முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டுக்களையும் வென்றதோடு தேசிய விருதையும் வென்றார்.

தீபாவளிக்கு வெளியான சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்து அசத்தினார்.

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

இதனை தொடர்ந்து மகேஷ்பாபு நடிக்கும் சர்க்காரு வாரிப்பாட்டா, சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் வேதாளம் ரீமேக் உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். இதனை தவிர சாணி காயிதம் படத்தில் செல்வராகவனுடன் இணைந்து நடிக்கிறார். சில நாட்களுக்கு முன் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தீபிகா சொல்றத கேளுங்க... இனிமே இங்கதான் இதை போடனும்... மும்பை மாநகராட்சி போட்ட பதிவு!

 

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

இதுதவிர  மலையாளத்தில் டோவினோ தாமஸ் நடிக்கும் வாஷி படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இப்படத்தின் படத்தின் ஷூட்டிங் சில மாதங்களுக்கு முன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அண்மையில் இப்படத்தின் படப்பிடிபபு முடிந்து விட்டதாக படக்குழு அறிவித்தது. இந்நிலையில், ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் மற்றொரு அப்டேட் தந்துள்ளார் கீர்த்தி சுரேஷ்.

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

தமிழ்,மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள 'குட்லக் சகி' ஜன 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. பழங்குடியின பெண்ணாக வரும் கீர்த்தி சுரேஷ் துப்பாக்கி சுடும் வீராங்கனையாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆதி, ஜெகபதி பாபு, ராகுல் ராதாகிருஷ்ணா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அறிமுக இயக்குநர் நாகேஷ் குகுநூர் இப்படத்தை இயக்கியுள்ளார்.

சந்தானம் நடிக்கும் AGENT கண்ணாயிரம்! பெர்த்டே ட்ரீட்டாக வெளியான த்ரில்லான டீசர்!

 

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

கடந்த 2019 ஆம் ஆண்டு 'குட்லக் சகி' படப்பிடிப்பு தொடங்கி உடனடியாக முடித்தாலும் கொரோனாவால் இரண்டு ஆண்டுகளாக வெளியிட முடியவில்லை. கொரோனாவால் பெரிய ஹீரோக்களின் படங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் படத்தின் வெளியீட்டை கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

GoodLuck Saki starring Keerthi Suresh release date announced

People looking for online information on கீர்த்தி சுரேஷ், குட்லக் சகி, GoodLuck Saki, Keerthy Suresh will find this news story useful.