"எனக்கு அம்மா அந்தஸ்து கொடுத்தது நீ..!" - மகன் பிறந்தநாளில் நடிகை ஜெனிலியா உருக்கம்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 26, 2019 02:43 PM
தமிழ் சினிமாவில் விஜய், தனுஷ், ஜெயம் ரவி என முன்னணி நடிகர்களுடன் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஜெனிலியா.

பாலிவுட் நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் என்பவரை கடந்த 2012ம் ஆண்டு காதல் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ரியான், ராய்ல் என இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகன் ரேயான் தனது 5வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி, தன் மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன் உருக்கமான பதிவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
அதில், “அன்புள்ள ரியான், அனைத்து பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் வளரக் கூடாது, இப்படியே குழந்தையாகவே இருகக் வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், நான் அப்படி விரும்பவில்லை. உன்னுடைய ஒவ்வொரு ஆண்டையும் ரசிக்க விரும்புகிறேன். நீ நல்ல இளைஞனாக வளர்வதை பார்க்க விரும்புகிறேன். உனக்கு பறக்க இறக்கைகள் கொடுத்து, அதன் அடியொல் காற்றாக இருக்க ஆசைப்படுகிறேன். வாழ்க்கை மிகவும் கடினமானது, ஆனால் நீ திடமானவன். எது நடந்தபோதிலும், உன்னை மட்டுமே நீ நம்பு. உன் மீது என எப்போது நம்பிக்கை உள்ளது”.
“இதைத் தவிர, வேறு ஒன்றை உனக்கு தெரியப்படுத்த விரும்புகிறேன். அது என்னவென்றால், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன், நீ எனக்குக் கிடைத்த மிகப் பெரிய பொக்கிஷம்.. என்னை அம்மாவாக்கிய குட்டி பையனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் – என் முதல் குழந்தை” எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.