darbar USA others

விஷ்ணு விஷால் நடிக்கும் எஃப்.ஐ.ஆரின் மாசான செக்கண்ட் லுக் - கூட இன்னொரு சர்ப்ரைஸ் லுக் உள்ளே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது ஜகஜாலக்கில்லாடி, காடன், நேற்று இன்று நாளை 2 அகிய 3 திரைப்படங்களில் பிசியாக உள்ளார். இதற்கிடையில் அனு ஆனந்த் இயக்கத்தில் இவர் நடிக்கும் எஃப்.ஐ.ஆர். திரைப்படம் இறுதிக்கட்ட பணிகளில் உள்ளன.

F.I.R, Vishnu Vishal, Gautham Vasudev Menon Second look release date

இப்படத்தில் இயக்குநர் கவுதம் மேனன், மற்றும் தூங்கா நகரம், சிகரம் தொடு ஆகிய படங்களை இயக்கிய கவுரங் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். படத்தை விஷ்ணு விஷாலே தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் 2வது லுக் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவைப் போன்ற வித்தியாசமான வடிவமைப்பிற்குள் கம்பிகளால் பிணைக்கப்பட்டு விஷ்ணு விஷால் நிற்கும் போஸ்டர் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

மேலும், இதையடுத்து விஷ்ணு விஷால் தன் கட்டுடலோடு வெளியிட்ட புகைப்படம் ஒன்றும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வரும் ஜனவரி 26ம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

Entertainment sub editor