RRR Others USA
www.garudabazaar.com

பீஸ்ட், காத்து வாக்குல காதல், விக்ரம் வரிசையில்…. சிவகார்த்திகேயனின் ‘டான்’ – வேற லெவல் update!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள டான் திரைப்படம் மே 13 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது.

DON Movie theatrical rights bagged by Redgiant movies

சிவகார்த்திகேயனின் College Drama…..

சிவகார்த்திகேயன், எஸ் ஜே சூர்யா, சூரி, பிரியங்கா அருள் மோகன், ஷிவாங்கி மற்றும் பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் டான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி  இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை சிவகார்த்திகேயனின் எஸ் கே புரொடக்ஷன்ஸ் நிறுவனமும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரித்துள்ளன.  சிவகார்த்திகேயன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாகவும் எஸ் ஜே சூர்யா கல்லூரி முதல்வராகவும் நடித்துள்ளனர். நகைச்சுவை மற்றும் காதலுக்கு முக்கியத்துவம் உள்ள படமாக டான் உருவாகியுள்ளது.

அனிருத் மேஜிக்…

இந்த படத்துக்கு இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது. அனிருத் இசையில் ஏற்கனவே வெளியாகியுள்ள ஜலபுல ஜங்கு மற்றும் பே (bae) ஆகிய பாடல்கள் சமூகவலைதளங்களில் ஹிட்டடித்துள்ளன. டான் திரைப்படத்தின் அனைத்துப் பணிகளும் கடந்த ஆண்டு இறுதியிலேயே முடிந்த நிலையில் மார்ச் 25 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர்.

DON Movie theatrical rights bagged by Redgiant movies

RRR படத்துக்காக ஒதுங்கிய டான்…

ஆனால் அதே நாளில் ராஜமௌலியின் பிரம்மாண்ட படமான ஆர் ஆர் ஆர் வெளியாக இருந்தது. மேலும் அந்த படத்தின் தமிழக திரையரங்க விநியோக உரிமம் லைகா நிறுவனம் வாங்கியிருந்தது. இதனால் டான் படத்தின் ரிலீஸ் தேதி மே 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து லைகா நிறுவனம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்திருந்தது.

DON Movie theatrical rights bagged by Redgiant movies

கைப்பற்றிய ரெட் ஜெயிண்ட்ஸ்…

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினினின் ரெட் ஜெய்ண்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்த அறிவிப்பை தற்போது வெளியிட அது இணையத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது. இந்த ஆண்டு வெளியான பெரிய படங்களான எதற்கும் துணிந்தவன் மற்றும் ராதே ஷ்யாம் ஆகிய படங்களை ரெட் ஜெயிண்ட்ஸ் வெளியிட்டுள்ளது.

DON Movie theatrical rights bagged by Redgiant movies

அதுபோலவே விரைவில் வர இருக்கும் பீஸ்ட், காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் விக்ரம் உள்ளிட்ட படங்களையும் இந்த நிறுவனமே வெளியிடுகிறது. அந்த வரிசையில் இப்போது சிவகார்த்திகேயனின் டான் திரைப்படமும் இணைந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

DON Movie theatrical rights bagged by Redgiant movies

People looking for online information on Don, Red Giant Movies, Udhayanidhi Stalin will find this news story useful.