www.garudabazaar.com

அந்த ஹிட் பட பார்ட் 2வில் இணைகிறாரா இயக்குநர் தங்கர் பச்சான் ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒளிப்பதிவாளர், இயக்குநர் தங்கர்பச்சான் அடுத்ததாக மறுமலர்ச்சி இரண்டாம் பாகத்தில் பணிபுரியவுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில் இயக்குநர் தங்கர் பச்சான் சார்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதில் மறுமலர்ச்சி 2 படம் குறித்து மறுப்பு தெரிவித்த அவர், தன்னை யாரும் அனுகவில்லை என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Director Thangar Bachan clarifies ther rumour | வதந்திகளை மறுத்த பிரபல இயக்குநர் தங்கர் பச்சான்

மேலும் அவர் தெரிவித்ததாவது, ''ஆறு மாத காலம் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடந்து சிந்தனை நசுக்கப்பட்டு தவித்திருந்தேன். இயற்கையின் அரவணைப்பில் 13 நாட்கள் இரவும் பகலும் ஓய்வின்றி இடைவிடாமல் எந்நாளும் எக்காலத்திற்கும் பேசப்படும் எனது அடுத்த படத்திற்கான ஒரு சிறந்த திரைக்கதையை தற்போது எழுதி முடித்தேன்.

தொடர்ந்து பேனா பிடித்து எழுதியதில் விரலில் கொப்புளம் ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாள் இடைவெளியில் மீண்டும் மற்றொரு சிறந்த படைப்புக்கான திரைக்கதையை உருவாக்கம் செய்ய இருக்கிறேன். முழுமையான இரண்டு வாரங்களில் இடைஞ்சல் இல்லாத  தூய்மையான காற்று.. தூய்மையான நீர்.. இயற்கை உணவு இவைகளுடன் கூடிய சூழலில் இதை எழுதி முடித்திருக்கிறேன்.

கொரோனா காலத்தில் எனக்கான பணிகளில் பல முன்னேற்றத் தடைகள் இருந்தாலும் இரண்டு சிறந்த திரைக்கதைகள் கிடைக்க உள்ளன எனும் மகிழ்ச்சி அனைத்தையும்  மறக்கச் செய்கின்றன'' என்றார்.

Director Thangar Bachan clarifies ther rumour | வதந்திகளை மறுத்த பிரபல இயக்குநர் தங்கர் பச்சான்

People looking for online information on Marumalarchi 2, Thangar bachan will find this news story useful.