கொரோனா ஊரடங்கு - சமையல் செய்ய களமிறங்கிய பிரபல இயக்குநர் - வெளியான வைரல் வீடியோ
முகப்பு > சினிமா செய்திகள்லாக்டவுன் காரணமாக பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட நடவடிக்கைகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். டிக் டாக் செய்வது, டான்ஸ் வீடியோ, சமையல் என பிரபலங்கள் பகிரும் வீடியோ செம வைரலாகி வருகிறது.
![Director Seenu Ramasamy shares cooking Video goes viral | இயக்குநர் சீனு ராமசாமி சமையல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. Director Seenu Ramasamy shares cooking Video goes viral | இயக்குநர் சீனு ராமசாமி சமையல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-seenu-ramasamy-shares-cooking-video-goes-viral-photos-pictures-stills.jpg)
அதன் ஒரு பகுதியாக தற்போது பிரபல இயக்குநர் தனது ட்விட்டர் பக்கத்தில் சமையல் செய்யும் வீடியோவை பகிர்ந்துள்ளார். மசாலாக்களை அவரே அம்மியில் அரைத்து சமையல் செய்கிறார். அந்த வீடியோவில், கொரோனா ஊரடங்கினால் ஒரு ரசவாதம் நிகழ்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
'தர்மதுரை' படத்துக்கு பிறகு சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள 'மாமனிதன்' படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள இந்த படத்துக்கு இளையாராஜாவுடன் இணைந்து யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
— Seenu Ramasamy (@seenuramasamy) April 19, 2020
Tags : Seenu ramasamy, Coronavirus, Lockdown