தளபதியின் பிகிலா? நண்பனின் கைதியா? - பிரபல இயக்குநரின் FDFS முதல் சாய்ஸ் எது தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல இயக்குநர் ரத்னகுமார் தனது முதல் படமான ‘மேயாதமான்’ திரைப்படம் ரிலீசான தருணத்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Director Rathna Kumar go for Bigil FDFS not for Kaithi

கடந்த 2017ம் ஆண்டு அக்.17ம் தேதி கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘மேயாதமான்’ திரைப்படம் ரிலீசானது. வைபவ், பிரியா பவானி ஷங்கர், இந்துஜா உள்ளிட்டோர் நடித்த இப்படத்தை அறிமுக இயக்குநர் ரத்னகுமார் இயக்கியிருந்தார். இப்படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படம் ரிலீசாகி 2 ஆண்டுகள் ஆனதையொட்டி இயக்குநர் ரத்னகுமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அவரது ட்வீட்டில், “2 ஆண்டுகளுக்கு முன் அக்.17ம் தேதி எனது படம் ‘மேயாதமான்’ மிக பிரம்மாண்டமான தளபதி விஜய்யின் ‘மெர்சல்’ படத்துடன் ரிலீசானது. ஆனால், நான் மெர்சல் FDFS காட்சியை பார்த்தேன். தற்போது நண்பனின் கைதி படம், பிகில் படத்துடன் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இப்போதும் பிகில்  FDFS-க்கு தான் செல்வேன். களத்தில் சந்திப்போம் நண்பா” என இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.

தீவிர தளபதி ரசிகன் என்பதை நிரூபிக்கும் விதமாக இயக்குநர் ரத்னகுமார் இதனை தெரிவித்துள்ளார். மேலும், தளபதி விஜய் நடிக்கவிருக்கும் ‘தளபதி 64’ திரைப்படத்திற்கு இயக்குநர் ரத்னகுமார் கூடுதல் திரைக்கதாசிரியராக பணியாற்றவிருக்கிறார். இவர் ‘கைதி’ மற்றும் விஜய்யின் தளபதி 64 இயக்குநரான லோகேஷ் கனகராஜின் நெருங்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.