'வரலாறு' படத்தில் அஜித்தால் மாறிய கிளைமேக்ஸ் - சீக்ரெட் சொல்லும் இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் அஜித்குமாரின் பிறந்த நாள் மே 1 அன்று கொண்டாடப்பட்டுவருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு திரையுல பிரபலங்களும் அஜித்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Director KS Ravikumar shares his working experience with Thala Ajith ANd Varalaru movie

இந்நிலையில் நடிகர் அஜித்தை வைத்து 'வில்லன்', 'வரலாறு' என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார். அவர் அஜித்துடன் பணிபுரிந்த அனுபவங்கள் குறித்து  Behindwoods TVக்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், 'பஞ்ச தந்திரம்' படப்பிடிப்பில் நான் இருக்கும் போது, தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி என்னிடம் அஜித்தின் கால்ஷீட் இருக்கிறது. ஒரு படம் பண்ணலாமா ? என்று கேட்டார்.  ஆனால் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக வேண்டும் என்றும் கூறினார்.

கதை ரெடியா இருக்கா ? என்று கேட்டதற்கு, இல்லை என்று கூறினார். கதை ரெடி இல்லாமல் எப்படி படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்வது என்று தயங்கினேன். ஏனெனில் தீபாவளிக்கு அப்போது மூன்று மாதங்களே இருந்தது. அப்போது யூகி சேது சொன்ன கதை தான் 'வில்லன்'.

வரலாறு திரைப்படமும் அப்படித்தான் அமைந்தது. நான் இயக்க வேண்டிய ஒரு படத்துக்கு காலதாமதம் ஏற்பட்டது. அவருக்கும் ஏ.ஆர்.முருகதாஸுடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டிய இருந்து அதுவும் தள்ளிப்போனது.

அப்போது தயாரிப்பாளர் எஸ்.எஸ்.சக்கரவர்த்தி என்னிடம் பேசி, வரலாறு உருவானது. அந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த படத்தில் பெண் தன்மையுள்ள அந்த வேடத்தை செய்வதற்கு தனி தைரியம் வேண்டும். ஹீரோக்கள் அவ்வளவு சீக்கிரம் அப்படி ஒரு வேடத்தை ஏற்க மாட்டார்கள். அதுக்கு அப்புறம் சில நடிகர்கள் அந்த மாதிரி வேடம் ஏற்று நடித்தார்கள் என்றால் அதற்கு முன்னோடி அஜித் தான் என்று சொல்வேன். 'காஞ்சனா' படத்தில் சரத்குமார் பண்ண வேடமாகட்டும்,  இப்போ வெளியான சூப்பர் டீலக்ஸ் உள்ளிட்ட படங்களுக்கு இன்ஸ்பிரேஷன்ஸ் அஜித் தான்.

'வரலாறு' படத்தில் கிளைமேக்ஸை அஜித்திடம் சொன்ன போது எதுக்கு சார் வில்லன் சாகணும். அவன் என்ன சார் தப்பு பண்ணான்?. அவன் தன்னுடைய அம்மாவுக்காகவே வாழ்ந்தான், அம்மா பைத்தியம் ஆனதும் அவன் வில்லனாகிவிட்டான். தப்பு பண்ணது என்னமோ பெரியவர் தானே? அப்போ அவர் தானே சாகவேண்டும் என்று கேட்டார். அதற்கு பிறகு அப்பா அஜித் சாவது போல் கதையை மாற்றினோம் என்றார்.

'வரலாறு' படத்தில் அஜித்தால் மாறிய கிளைமேக்ஸ் - சீக்ரெட் சொல்லும் இயக்குநர் வீடியோ