இயக்குநர் சுசீந்திரன் விபத்தில் காயமடைந்த நிலையில், பிரபல இயக்குநர் ஆறுதல்
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குநர் சுசீந்திரன் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (24.01.2020) அதிகாலை நடைபெயற்சி செய்து கொண்டிருக்கும்போது கார் ஒன்று மோதி சிறு விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் அவருக்கு கையில் முறிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவரை மூன்று வாரங்கள் ஓய்வில் இருக்கவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனராம். இந்நிலையில் இயக்குநர் இமயம் பாரதிராஜா அவரை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசார்த்துள்ளார்.
இயக்குநர் பாரதிராஜா , சுசீந்திரன் இயக்கத்தில் 'பாண்டியநாடு', 'கென்னடி கிளப்' ஆகிய படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் சுசீந்திரன் இயக்கத்தில் சாம்பியன் என்ற படம் வெகு சமீபத்தில் வெளியானது.
Tags : Suseenthiran, Bharathiraja