பாலிவுட் கிங் கானை இயக்கும் ‘மெர்சல்’ இயக்குநர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘தளபதி 63’ திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட் திரைப்படம் ஒன்றில் நடிகர் ஷாருக்கானை இயக்குகிறார்.

Director Atlee to direct Bollywood Star Shah Rukh Khan

‘தெறி’, ‘மெர்சல்’ திரைப்படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்து வருகிறார். மேலும், கதிர், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ரெபா மோனிகா, ஆனந்தராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்கிறார்.

‘தளபதி 63’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சமீபத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணி இடையிலான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அட்லி ஆகியோர் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

அதைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடிக்கவிருப்பதாகவும், ‘மெர்சல்’ படத்தின் ஹிந்தி ரீமேக்கை அட்லி இயக்கவுள்ளதாகவும், அதில் ஷாருக்கான் நடிப்பதாகவும் தகவல்கள் பரவின.

அட்லி-ஷாருக்கான் கூட்டணி அமைவதை உறுதிப்படுத்தும் விதமாக, அட்லியின் அலுவலகத்திற்கு சென்று ஷாருக்கான் அவரை சந்தித்ததும் வைரலானது. இந்நிலையில், தளபதி 63 கேமியோவும் அல்ல, மெர்சல் ரீமேக்கும் அல்ல, புதிய பாலிவுட் திரைப்படம் ஒன்றில் ஷாருக்கானை அட்லி இயக்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ராஜா ராணி’, ‘தெறி’, ‘மெர்சல்’ என தமிழில் 3 திரைப்படங்களை இயக்கியுள்ள அட்லி தற்போது இந்திய சினிமாவின் அடையாளமாக திகழும் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.