''இப்பவும் அலைபாயுதே ஸ்டைல் மேரேஜ்னு நியூஸ் வருது...'' - பிரபல இயக்குநர் கமெண்ட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான படம் 'அலைபாயுதே'. இந்த படம் இன்றளவும் கொண்டாடப்படுவதற்கு காரணம் மணிரத்னத்தின் காட்சி மொழி. அன்றைய காலக்கட்ட காதலை அப்படியே மிகவும் யதார்த்தமாக தனக்கே உரிய பாணியில் பதிவு செய்திருப்பார்.

பி.சி.ஸ்ரீராமின் கிளாஸான ஒளிப்பதிவும் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்களும் மிகவும் பலமாக அமைந்தன. இந்த படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் மாதவன். முதல் படம் என்று தெரியாத அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருப்பார். இவருக்கும் ஷாலினிக்கும் காதல் தோன்றும் விதம், கல்யாணத்திற்கு பிறகு இருவரிடையே நிகழும் ஊடல் மற்றும் கூடல் என அவ்வளவு இயல்பாக பதிவு செய்திருப்பார்.

குறிப்பாக கல்யாணத்திற்கு பிறகு தோன்றும் சிறு சிறு மனக்கசப்புகள் இயல்பாக நிகழக்கூடிய ஒன்று என்பதை அழுத்தம் திருத்தமாக இந்த படம் பதிவு செய்திருக்கும். இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறது. இதனையடுத்து பிரபலங்கள் பலரும் படம் குறித்து நினைவுகளை பதிவு செய்தனர்.

அந்த வகையில் இயக்குநர் அறிவழகன் தனது ட்விட்டர் பக்கத்தில், இப்பொழுதும் செய்தித்தாள்களில் அலைபாயுதே ஸ்டைலில் திருமணம் என்று செய்திகள் வெளியாகிறது. இந்த படம் கலாச்சார ரீதியான அதிர்ச்சியை திரையில் கொண்டு விதத்தில் பதிவு செய்த விதத்தில் இப்பொழுதும் சிறப்பானதாக இருக்கிறது. அது தான் மணிரத்னம் சார். பச்சை நிறமே டிஐ செய்யப்படாத இந்த பாடல் பி.சி.ஸ்ரீராமில் இருக்கும் கலையை காட்டுகிறது'' என்றார்.

Entertainment sub editor