KAAPAN USA OTHERS

''விஸ்வாசம்' மியூசிக் இந்த ஹிந்தி படத்துல யூஸ் பண்ணிட்டாங்க'' - டி.இமான் குற்றச்சாட்டு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் - நயன்தாரா நடிப்பில் கடந்த பொங்கலை முன்னிட்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் 'விஸ்வாசம்'. சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார்.

D.Imman Condemned for Thala Ajith's Viswasam BGM Used in Majaavan

அப்பா - மகள் பாசத்தை பறைசாற்றிய இந்த படம் ரசிகர்களின் கண்களை குளமாக்கியது. மேலும் இந்த படத்துக்கு டி. இமான் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்தது.

இந்நிலையில் மார்ஜாவன் என்ற ஹிந்தி படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. டிரெய்லரின் இறுதியில் விஸ்வாசம் படத்தின் பின்னணி இசை இடம் பெற்றிருந்தது. இதனையடுத்து டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில், ''விஸ்வாசம்' படத்தோட பின்னணி இசை 'மர்ஜாவன்' (marjaavaan) படத்தின் டிரெய்லரில் யூஸ் பண்ணிட்டாங்க. இதுகுறித்து தயாரிப்பு தரப்பில் இருந்தும் இசை நிறுவனத்திடம் இருந்து எந்த தகவலும் இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளார்.