www.garudabazaar.com

மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்காக டப்பிங் பேசும் அவரது தம்பி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அர்ஜூனின் உறவினரும் பிரபல கன்னட நடிகருமான சிரஞ்சீவி சார்ஜா இளம் வயதிலேயே மரணமடைந்தது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.  அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் கர்ப்பமாக உள்ள நிலையில் தன் முதல் குழந்தையைக் கூட காணாமல் அவர் மரணித்தது குடும்பத்தார் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் வேதனைக்குள்ளாக்கியது.

Dhruva Sarja speaks why he delaying dub his late brother Chiranjeevi sarja | மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்காக டப்பிங் பேசும் அவரது தம்பி

இந்நிலையில் அவரது தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா சமீபத்தில் கொரோனா பாதித்து அதில் இருந்து மீண்டார். இந்நிலையில் அவர்  சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அண்ணன் சிரஞ்சீவி சார்ஜாவின் படங்களுக்கு டப்பிங் பேசுவது தாமதமாகி வருவது குறித்து பேசினார்.

அதில் ''நான் சிரஞ்சீவி சார்ஜாவின் படமான 'ராஜமார்த்தாண்டா' என்ற படத்தில் டப்பிங் பேச ஒப்புக்கொண்டேன். அப்போது அவரது காட்சிகளை பார்த்து உணர்ச்சிவசப்பட்டேன். அதனால் சில காலம் கழித்து மீண்டும் டப்பிங் பேசலாம் என்று முடிவு செய்தேன்'' என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Dhruva Sarja speaks why he delaying dub his late brother Chiranjeevi sarja | மறைந்த நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவுக்காக டப்பிங் பேசும் அவரது தம்பி

People looking for online information on Chiranjeevi Sarja, Dhruva Sarja will find this news story useful.