legend updated recent

துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா'வில் இருந்து வெளியான முதல் பாடல் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா  நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் அர்ஜூன் ரெட்டி. இந்த படத்துக்கு ரதன் இசையமைத்திருந்தார். இந்த படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார்.

Dhruv Vikram's Adithya Varma first song Etharkadi is out

தமிழில் இந்த படம் 'ஆதித்யா வர்மா' என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இந்த படத்தை விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்துவருகிறார்.  இந்த படத்துக்கு ரவி.கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ரதன் இசையமைக்கிறார். இந்த படத்தை கிரீசயா இயக்குகிறார்.

இந்த படத்தை E4 Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த படத்தில் இருந்து எதற்கடி வலி தந்தாய் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை விவேக் எழுத, துருவ் விக்ரம் இந்த பாடலை பாடியுள்ளார்.

துருவ் விக்ரமின் 'ஆதித்யா வர்மா'வில் இருந்து வெளியான முதல் பாடல் இதோ வீடியோ