'கத்தரி பூவழகி' அசுரன் படத்தில் இருந்து வெளியான பாடல் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Aug 28, 2019 02:55 PM
கலைப்புலி தாணு தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் அசுரன் திரைப்படத்தின் “கத்தரி பூவழகி” பாடல் வெளியாகியுள்ளது.
![Dhanush Vetrimaaran Asuran Movie Kathiripoovazhagi Song Dhanush Vetrimaaran Asuran Movie Kathiripoovazhagi Song](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/dhanush-vetrimaaran-asuran-movie-kathiripoovazhagi-song-photos-pictures-stills.png)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். எழுத்தாளர் பூமணி எழுதிய "வெக்கை" நாவலை அடிப்படையாக கொண்டு இந்த படம் தயாராகிறது. இதில் அப்பா-மகன் என இரு வேடங்களில் தனுஷ் நடிக்கிறார். தனுசுக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை மஞ்சுவாரியர் நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அசுரன் திரைப்படம் அக்டோபர் 4ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அசுரன் படத்தின் முதல் பாடலாக "கத்திரிப்பூ அழகி" பாடல் இன்று வெளியாகியுள்ளது. இந்த பாடலை வேல்முருகன் மற்றும் ராஜலட்சுமி இணைந்து பாடியுள்ளனர்.
'கத்தரி பூவழகி' அசுரன் படத்தில் இருந்து வெளியான பாடல் இதோ வீடியோ