‘வடசென்னை’ படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் ‘அசுரன்’ திரைப்படத்தில் இடம்பெறும் குத்து பாடல் ஒன்றை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.

கலைப்புலி எஸ்.தாணுவின் ‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல், ஆடுகளம் நரேன், யோகிபாபு, குருசோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். எழுத்தாளர் பூமணியின் ‘வெக்கை’ நாவலை தழுவி உருவாகவிருக்கும் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது, இந்நிலையில், படத்தின் பாடல்கள் குறித்த தகவலை இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ‘பொல்லாத பூமி’ என்ற பாடலை பாடகர்கள் தனுஷ், கருணாஸின் மகன் கென் கருணாஸ், தீ ஜெய் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இப்பாடலை யுகபாரதி எழுதியுள்ளார்.
தனுஷ் நடித்த ‘பொல்லாதவன்’, ‘மயக்கம் என்ன’, ‘ஆடுகளம்’ திரைப்படங்களை தொடர்ந்து ‘அசுரன்’ திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இது ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் 71வது திரைப்படமாகும். வெற்றிக் கூட்டணியான தனுஷ்-வெற்றிமாறன்-ஜி.வி.பிரகாஷின் அசுர கூட்டணி மீது அதிக எதிர்ப்பார்ப்பு நிலவுகிறது.
#Asuran .. it was good fun recording with ken , tee jay and g v .. a soothing raw peppy song :) can’t wait for you all to listen to it. https://t.co/TgZ208zY4i
— Dhanush (@dhanushkraja) June 24, 2019