'லண்டனில் அசுரன்..' - D40-டீமிற்கு ஸ்பெஷல் Screening செய்த தனுஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'வட சென்னை' படத்துக்கு வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'அசுரன்' திரைப்படம் (அக்.4) உலகம் முழுவதும் ரிலீசாகி வரவேற்பை பெற்று வருகிறது.

Dhanush hosts a special screening for D40 team in London

கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படத்தில் தனுஷுடன் மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பாலாஜி சக்திவேல், கென், டிஜே உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக கொண்டு வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படத்தில் மிக அழுத்தமாக சாதி அரசியலையும், சாதி ரீதியிலான ஒடுக்குமுறையையும் பேசப்பட்டுள்ளது. இப்படத்தின் நடிகர்கள் தேர்வும், அவர்களது சிறந்த Performance-ம் ரசிகர்களிடையே நேர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இந்நிலையில், லண்டனில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘D40’ திரைப்படத்தின் குழுவினருக்கு பிரத்யேகமாக ‘அசுரன்’ திரைப்படம் திரையிடப்பட்டது. அப்போது படக்குழுவுடன் நடிகர் தனுஷ் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

இதனிடையே, ‘பரியேறும் பெருமாள்’ இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கும் திரைப்படத்தின் இசை பணி லண்டனில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.