www.garudabazaar.com

"வந்து அடிச்சு பாரு".. ஆக்ரோசமான தனலட்சுமி .. எரிமலையாய் வெடித்த மணிகண்டன்.. ரணகளம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6 வது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. ஒரு பக்கம் கலகலப்பாக பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் இயங்கி கொண்டே இருந்தாலும் டாஸ்க் என்று வந்து விட்டால் அங்கே நிச்சயம் களேபரம் தான்.

dhanalakshmi and manikantan fight for task in bigg boss house

பொம்மை டாஸ்க்கின் போது ஷெரினா கீழே விழுந்தது முதல் அவரை தள்ளி விட்டது யார் என்பதில் பெரிய குழப்பமே அரங்கேறி இருந்தது. இதனால் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வந்ததால் அந்த வாரமே களேபரம் ஆகி இருந்தது.

இதன் பின்னர் வார இறுதியில் வந்த கமல்ஹாசன், அனைத்து பிரச்சனைகளுக்கும் ஆதாரங்களுடன் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

இதனிடையே, ஜிபி முத்து, சாந்தி, அசல் கோலார், ஷெரினா உள்ளிட்ட போட்டியாளர்களும் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளனர். அப்படி ஒரு சூழலில், தற்போது அடுத்த ஒரு புதிய டாஸ்க் காரணமாக, பிக்பாஸ் வீட்டில் கடும் வாக்குவாதம் ஒன்று நடைபெற்றுள்ளது. பிக்பாஸ் வீட்டுக்குள் ஃபேக்டரி டாஸ்க் நடக்கிறது. இதில், ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா?’, ‘அடை தேனடை’ என இருவகை இனிப்பு கம்பெனிகளாக பிரிந்து பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் கடைகளை வைத்திருக்கின்றனர். இந்த இனிப்பு பொருட்களுக்கான அட்டைகளை வீட்டுக்குள் அனுப்பும்போது போட்டியாளர்கள் முந்தியடித்துக்கொண்டு சென்று கலெக்ட் செய்துகொண்டு வருகின்றனர்.

dhanalakshmi and manikantan fight for task in bigg boss house

அப்படி தயாரிப்பு பண்டங்களை சேகரிக்கும் போது தான் தனலட்சுமி மற்றும் மணிகண்டன் ஆகியோரிடையே தள்ளுமுள்ளு ஏற்படுகிறது. அப்போது வந்த பொருளும் மணிகண்டன் கைக்கு போய்விட தன்னை மிகவும் ஆவேசமாக தள்ளிவிட்டு தன் கையிலிருந்து பிடுங்கி மணிகண்டன் பொருட்கள் எடுத்துக் கொண்டதாகவும் தனலட்சுமி கூறுகிறார். இந்த பேச்சில் தனலட்சுமி மரியாதைக் குறைவாகப் பேசுவதாய் சொன்ன மணிகண்டன், எப்படி 'டா' என சொல்லலாம் என்றும், உன் வயது என்ன, என் வயது என்ன என்றும் கேட்கிறார்.

இதன் பெயரில், மணிகண்டன் மற்றும் தனலட்சுமி ஆகியோர் மாறி மாறி ஆவேசமானது மட்டுமில்லாமல், ஒருவரை ஒருவர் அடிக்கவும் மல்லுக் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். இதற்கிடையே, வா வந்து அடிச்சு பாரு என்றும் ஆக்ரோஷமாக மணிகண்டனிடம் தனலட்சுமி கூறுகிறார். மணிகண்டன் - தனலட்சுமி சண்டையால் பிக்பாஸ் வீடே அல்லோலப்பட்டு போனது.

dhanalakshmi and manikantan fight for task in bigg boss house

மேலும், அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்த அசீம், இரண்டு பேருமே எகிறிக் கொண்டு தான் வந்தீர்கள் என்றும் அவர்களிடம் நிலையை விளக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

dhanalakshmi and manikantan fight for task in bigg boss house

People looking for online information on BB6 Tamil, Biggboss 6 Tamil, Dhanalakshmi, Manikantan will find this news story useful.