சிவகார்த்திகேயனின் ஹீரோ பட Deleted Scene வீடியோ இதோ !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்து கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி வெளியான 'ஹீரோ' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த படத்தை இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியிருந்தார்.

Deleted Scene Video out from Sivakarthikeyan's Hero

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைக்க ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருந்தார். அண்மையில் இந்த படத்தில் இளையராஜா பாடிய ஆயிரம் முகங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தை கேஜேஆர். ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க, ஆக்சன் கிங் அர்ஜூன், அபய் தியோல், இவானா, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து மூன்றாவது டெலிட்டட் சீன் தற்போது வெளியாகியுள்ளது.

சிவகார்த்திகேயனின் ஹீரோ பட DELETED SCENE வீடியோ இதோ ! வீடியோ

Entertainment sub editor