Fakir Other Banner USA

இந்த படத்துக்காக மற்றொரு பிக்பாஸ் ஸ்டாருடன் இணைந்த ஹரிஷ் கல்யாண்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' படத்துக்கு பிறகு ஹரீஸ் கல்யாண் நடித்துவரும் படம் 'தனுசு ராசி நேயர்களே'. இந்த படத்தை 'குணா', 'மகாநதி' படங்களின் இயக்குநர் சந்தான பாரதியின் மகன் சஞ்சய் பாரதி இயக்குகிறார். 

Daniel Annie Pope to act in Harish Kalyan's Dhanusu Raasi Neyargale

இந்த படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, முனீஷ்காந்த், ரேணுகா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.  இந்த படத்தை ஸ்ரீ கோகுலம் பிக்சர்ஸ் தயாரி்தது வருகிறது.

இந்நிலையில் இந்த படம் குறித்து இயக்குநர் சஞ்சய் பாரதி, ஹீரோ ஹரிஸ் கல்யாண் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகர் டேனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், 'தனுசு ராசி நேயர்களே படத்தில் பங்கு பெறுவதில் மகிழ்ச்சி. நன்றி சஞ்சய் பாரதி மற்றும் ஹரீஸ் கல்யாண்'' என்று தெரிவித்துள்ளார். ஹரிஷ் கல்யாண் பிக்பாஸ் சீசன் ஒன்றிலும், டேனி பிக்பாஸ் சீசன் 2லும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.