Reliable Software
www.garudabazaar.com

Video: "எங்கிட்ட 1500 ரூபாய்க்கு மேல புடவையே இல்ல".. நீயா நானாவில் ஆச்சர்யப்பட வைத்த CWC பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சின்னத்திரையில் அதிக அளவு ரசிகர்களை ஈர்த்த நிகழ்ச்சிகளில் ஒன்று விஜய் டிவி குக் வித் கோமாளி. இந்நிகழ்ச்சி பெரியோர் முதல் குழந்தைகள் வரை அனைவரையும் அதிகம் கவர்ந்தது.

CWC rithika talsk as guest in neeya naana promo vijay tv

இந்த நிகழ்ச்சியில் இதுவரை 2 சீசன்கள் முடிவடைந்துள்ளதை அடுத்து இந்நிகழ்ச்சியின் 3வது சீசன் எப்போது வரும் என இப்போதில் இருந்தே ரசிகர்கள் ஆர்வமாக காத்திருக்கத் தொடங்கிவிட்டனர். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் புகழ்,சிவாங்கி, சரத், பாலா, மணிமேகலை உள்ளிட்ட கோமாளிகளும் அஸ்வின், கனி, ஷகிலா, பாபா பாஸ்கர், பவித்ரா உள்ளிட்டோர் ஃபைனல் நிகழ்ச்சிவரை வந்து நிகழ்ச்சியை களைகட்டவைத்தனர்.

இதன் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக கனி தேர்வானார். இதனிடையே இந்த நிகழ்ச்சியில் பிரபலமான அஸ்வினும் புகழும் இணைந்து திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ளனர். இதேபோ, இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரித்திகா. பாக்யலக்ஷ்மி சீரியலில் அமிர்தா என்ற ஒரு ரோலில் நடிக்கும் ரித்திகா,  வைல்ட் கார்டு எண்ட்ரியாக குக் வித் கோமாளியில் கொஞ்ச நாட்கள் இருந்தாலும் ரசிகர்களை தனக்கே உரித்தான இயல்பான பேச்சிலும் குணத்தில் எளிதில் கவர்ந்தார்.

இந்நிலையில் வரும் வாரம், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நீயா நானா விவாத நிகழ்ச்சியில், புடவைகளின் மீது பெரும் ஆர்வம் கொண்ட பெண்கள் மற்றும் பெரிதாக விருப்பமில்லாத பெண்களுக்கான விவாதம் நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ரித்திகா, தன்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் சொன்னார். அப்போது கோபிநாத், “உங்களால் மறக்க முடியாத புடவை எது?” என கேட்டார்.

அதற்கு, தான் முதன் முதலில் சம்பாதித்த சம்பளத்தை வைத்து எடுத்த புடவை என்பதால் அது மிகவும் ஸ்பெஷல் என்றும், தான் விலை காஸ்ட்லியாக தான் இருக்க வேண்டும் என பார்த்து புடவை எடுப்பதில்லை என்றும், தனக்கு பிடித்த தனது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு புடவை 200 ரூபாய், 500 ரூபாயில் கிடைத்தாலும் அதை எடுத்துக்கொள்வதாகவும், அதற்காக காஸ்ட்லியான விலையில் மட்டும்தான் எடுக்க வேண்டும் என்பதில் உடன்பாடு இல்லை என்றும் குறிப்பிட்டார்.

அதாவது புடவை பிடித்திருந்தால் மட்டும் போதுமானது, அதன் விலை குறைவாக இருப்பதில் ஆட்சேபணை இல்லை. அதைவிட புடவை எடுப்பதை ஸ்டேட்டஸூடன் சேர்த்து பார்ப்பதில்  தனக்கு உடன்பாடில்லை என்பதை வெளிப்படுத்திய ரித்திகா, தன்னிடம் அதிகபட்சமாக 1500 ரூபாய்க்கு மேல புடவையே இருக்காது, 150 ரூபாய்க்கு காட்டன் புடவையானாலும் எடுப்பேன் என இந்நிகழ்ச்சியில் தான் அணிந்திருந்த புடவை 1100 ரூபாய் என குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி, வரும் ஞாயிறு அன்று மதியம் 12:30 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.

ALSO READ: 'சிம்பு'வின் மாநாடு First Single ரிலீஸ் அப்டேட்.. தயாரிப்பாளர் கூறிய உருக்கமான தகவல்.

தொடர்புடைய இணைப்புகள்

CWC rithika talsk as guest in neeya naana promo vijay tv

People looking for online information on CookuWithComali, CookuWithComali2, CookWithComali2, NeeyaNaana, Rithika, VijyaTelevision will find this news story useful.