www.garudabazaar.com

"அஸ்வினுடன் படம் முழுக்க வரும் புகழ்!".. ‘என்ன சொல்ல போகிறாய்’ பூஜையில் Exclusive பேட்டி.. Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அஸ்வின் ஹீரோவாக நடிக்கும் முதல் திரைப்படம் ‘என்ன சொல்லப் போகிறாய்’.

CWC pugazh exclusive byte enna solla pogirai ashwin movie pooja

இந்த படத்தின் டைட்டில் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இந்த படத்துக்கான பூஜை இன்று தொடங்கியது. இந்த பூஜையில் அஸ்வின், புகழ், தேஜூ அஸ்வினி, படத்தின் தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்த படம் முழுவதும் அஸ்வினுடன் டிராவல் செய்யக்கூடிய காமெடி கேரக்டராக நடிகர் புகழ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான புகழ், இந்த திரைப்படத்தில் நடிப்பது இவர்களின் காம்போ மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது. இந்த திரைப்படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் இயக்குகிறார்.

இந்த திரைப்படத்தில் நடிக்கும் புகழ், இந்த படத்தின் பூஜை விழாவில் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், “எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிறைய படங்களில் நடிக்கிறேன். ஆனாலும் அஸ்வினுடன் நடிப்பது என்பது எனக்கு மிகவும் சந்தோஷமான விஷயம். ஏனென்றால் என் நண்பன் அஸ்வினின் திரைப்படத்தில் படம் முழுவதும் நான் நடிக்கிறேன்.

ALSO READ: "கத கேக்கும்போது Hero-னு நெனைச்சு ஏமார்ந்துடுவேன்!".. முதல் பட பூஜை.. அஸ்வின் உருக்கம்!

கவுண்டர்களை போட்டு, பஞ்ச் டயலாக் பேசுவதை தாண்டி, பாடி லாங்குவேஜ் மூலமாக எந்த அளவுக்கு காமெடி செய்யமுடியுமோ காமெடி செய்து குழந்தைகளையும் கவரும் வகையில காமெடி செய்ய வேண்டும் என்று எண்ணுகிறேன். குழந்தைகளுக்கு எப்போதும் பாடி லாங்குவேஜ் மட்டும் தான் புரியும் அவர்கள் கவுண்டர்களை பார்க்க மாட்டார்கள். தொடர்ந்து பல படங்கள் நடிக்கிறேன். விரைவில் நல்ல செய்தி வந்து சேரும்!” என்று குறிப்பிடுகிறார்.

"அஸ்வினுடன் படம் முழுக்க வரும் புகழ்!".. ‘என்ன சொல்ல போகிறாய்’ பூஜையில் EXCLUSIVE பேட்டி.. VIDEO! வீடியோ

CWC pugazh exclusive byte enna solla pogirai ashwin movie pooja

People looking for online information on Ashwin, Enna Solla Pogirai, Pugazh, Teju Ashwini, Trending will find this news story useful.