ஜடேஜா பாஜகவுக்கு ஆதரவு - 'தெரிஞ்சிருந்தா நானும்...' ரிஷப் பந்த்தை வைத்து பிரபல இயக்குநர் கலாய்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உலகக்கோப்பை போட்டிகள் வரும் மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட இந்திய அணியை பிசிசிஐ நிர்வாகம் நேற்று(ஏப்ரல் 15) அறிவித்தது.

CS Amuthavan Point out with Rishabh Pant with Narendra Modi and Ravindra Jadeja

விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல்.ராகுல், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), கேதார் ஜாதவ், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், யஜூவேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா, ரவிந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

இந்நிலையில் ரவிந்திர ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் பாஜகாவை ஆதரிக்கிறேன். ஜெய் ஹிந்த் என்று குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த நரேந்திர மோடி, நன்றி ஜடேஜா, 2019 ஆண்டு உலக கோப்பையில் இந்தியா சார்பாக விளையாட தேர்வு செய்யப்பட்டதற்கு வாழ்த்துகள் என்றார்.

இதனை பகிர்ந்து ரிஷப் பந்த் தேர்வு செய்யப்படாததை மறைமுகமாக சுட்டிக்காட்டும் விதமாக தமிழ்படம் 2 இயக்குநர் சி.எஸ். அமுதன் தனது ட்விட்டர் பக்கத்தில்,  இது தெரிஞ்சிருந்தா நானும்... என ரிஷப் பந்த்தை குறிப்பிட்டுள்ளார்.