Reliable Software
www.garudabazaar.com

"10 வருஷமா இதுக்காக ஏங்கினேன்.. இப்ப தான்!".. அழுது தீர்த்த சுனிதா.. பிரியங்கா நெகிழ்ச்சி பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஞாயிறு அன்று ஒளிபரப்பான வருத்தப் படாத வாலிபர் சங்கம் ரியாலிட்டி ஷோவில் குக் வித் கோமாளி, சூப்பர் சிங்கர், கலக்கப் போவது யாரு நிகழ்ச்சிகளின் பிரபலங்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சீரியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Cook With Comali Sunitha emotional speech vijay tv show

இந்த நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி டீம் சார்பாக கலந்துகொண்டு பேசிய சுனிதா,  தான் வட இந்தியாவில் இருந்து கூட வரவில்லை. வடகிழக்கில் இருந்து (அஸ்ஸாம்) வந்திருப்பதால் தமிழில் பேசுவது இன்னும் சிரமமாகவே இருக்கிறது. ஆனால் அதுதான் ஆரம்பத்தில் தனது மைனஸ் ஆக இருந்தது. ஒரு பத்து வருடமாகவே நானும் ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி தொடங்கி எவ்வளவோ செய்து பார்த்தேன். ஆனால் தமிழ் மக்களின் மனதில் இடம் பிடிக்க முடியவில்லை என்று கூறினார்.

Cook With Comali Sunitha emotional speech vijay tv show

மேலும் அதில், “குக் வித் கோமாளிக்கு எதார்த்தமாக தான் போனேன். போகப் போக என்னை பற்றி மீம்ஸ் வர தொடங்கியது. 10 வருடம் வராத ஒரு விஷயம். இது எப்போ கிடைக்கும் என ஏங்கினேன். இப்போ அது கெடைச்சிருக்கு. இவ்ளோ வருஷம் எனக்கு தமிழ் தெரியாது எனும் நெகடிவ்வை ப்ளஸ் பாய்ண்டாக மாற்றி இந்த ஷோவில் காட்டுகிறார்கள்.

ஆரம்பத்தில் நான் மிகவும் கீழ்மையாக யோசித்தேன். ஆனால் இப்போது நான் தமிழ் மக்களின் மனதில் உட்கார ஆரம்பிச்சேன். அவர்கள் என்னை விரும்ப தொடங்கிவிட்டனர். எனக்கு நிம்மதியாக இருக்கிறது!” என குறிப்பிட்டார். அத்துடன் இதுபற்றி தமது இன்ஸ்டாவில் நன்றி சொல்லியும் பதிவிட்டிருந்தார். 

Cook With Comali Sunitha emotional speech vijay tv show

இந்நிலையில் தொகுப்பாளினியும் சுனிதாவின் தோழியுமான பிரியங்கா, “” என சுனிதாவின் பதிவை பகிர்ந்து, “மை அழகு. பெருமையா இருக்குடி. இன்னைக்கு நீ என்னவா இருக்கியோ அதுக்கு காரணம் உன் கடின உழைப்புதான். உன்னுடைய I wont give up என்கிற மனப்பான்மை உன்னை வாழ்வில் எங்கோ அழைத்துச் செல்லும். லவ் யூ மை சிங்கப் பெண்ணே.. என் தங்கம்!” என குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ: 'சுனிதா அக்கா என்னால நிறைய Face பண்ணிருக்காங்க'.. ரியாலிட்டி ஷோவில் ஃபீல் பண்ணிய சிவாங்கி!

"10 வருஷமா இதுக்காக ஏங்கினேன்.. இப்ப தான்!".. அழுது தீர்த்த சுனிதா.. பிரியங்கா நெகிழ்ச்சி பதிவு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Sunitha emotional speech vijay tv show

People looking for online information on CookWithComali, Sunitha, Trending, VijayTelevision will find this news story useful.