Kaateri logo top
www.garudabazaar.com

இளம் இசை அமைப்பாளருடன் கைகோர்த்த யுவன்.. "காஃபி வித் காதல்" படத்தின் அடுத்த பாடல் அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சுந்தர் சி இயக்கத்தில், அடுத்ததாக உருவாகி வரும் திரைப்படம் "காஃபி வித் காதல்". இந்த திரைப்படத்தினை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது.

coffee with kadhal yuvan shankar raja next single update

ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மூன்று நடிகர்கள் இணைந்து நடிக்க, இவர்களுடன் மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்டோர் நாயகிகளாக நடித்து வருகின்றனர்.

மேலும் இவர்களுடன் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி உள்ளிட்ட பலரும் காஃபி வித் காதல் திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

அதே போல, இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். முன்னதாக, காஃபி வித் காதல் என்ற திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் மற்றும் இரண்டு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. "ரம் பம் பம்" என்ற முதல் சிங்கிள் பாடல், ரீமேக் மிக்ஸ் ஆக யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளியாகி இருந்தது. கமல்ஹாசன் நடிப்பில், பல ஆண்டுகளுக்கு முன் வெளியான மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம்பெற்ற 'ரம் பம் பம்' என்ற பாடலை வாலி எழுதி இருந்தார். இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்திருந்தார்.

இதன் ரீமிக்ஸ் தான், காஃபி வித் காதல் திரைப்படத்தின் முதல் சிங்கிளாக இடம்பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து, "Baby Gurl" என்ற இரண்டாவது பாடலும் வெளியாகி இருந்தது. இதனை யுவன் சங்கர் ராஜா மற்றும் அசல் கோலார் உள்ளிட்டோர் பாடி இருந்தனர்.

இந்நிலையில், தற்போது காஃபி வித் காதல் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் குறித்து அசத்தலான அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. "Thiyagi Boys" என பெயரிடப்பட்டுள்ள இந்த பாடல், வரும் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல, இந்த படாலில் பிரபல இளம் இசை அமைப்பாளர் ஹிப்ஹாப் ஆதியும், யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்துள்ளார்.

காஃபி வித் காதல் படத்தின் முதல் இரண்டு பாடல்களும் ஹிட்டான நிலையில், யுவன் - ஆதி கூட்டணியில் வெளியாக உள்ள Thiyagi Boys பாடலையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

coffee with kadhal yuvan shankar raja next single update

People looking for online information on Hiphop Tamizha, Jai, Jiiva, Srikanth, Sundar C, Yuvan Shankar Raja will find this news story useful.