COBRA D Logo Top
www.garudabazaar.com

COBRA FDFS : பிரபல தியேட்டரில் ரசிகர்களுடன் ஆரவாரமாக கோப்ரா படம் பார்த்த விக்ரம் & துருவ்.. வைரல் VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் நடிகர் விக்ரம் கண்டு களித்தார்.

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

Also Read | விஜய் கூட ஒரு படம்.. இயக்குனர் இவரா இருக்கனும்.. சியான் விக்ரம் சொன்ன சூப்பர் ஐடியா!

விக்ரம் நடிப்பில்  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் இன்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் முதல் நாள் முதல் காட்சி காலை 5 மணிக்கு  திரையிடப்பட்டது. மற்ற இடங்களில் காலை 7 மணிக்கு முதல் காட்சி திரையிடப்பட்டது.

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

இந்த கோப்ரா படத்தின் முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் சேர்ந்து, நடிகர் சியான் விக்ரம் & துருவ் விக்ரம் கண்டு களித்தனர். சென்னை கோயம்பேடு ரோகிணி திரையரங்கில் ரசிகர்களின் ஆரவாரத்தோடு இருவரும் பால்கனியில் அமர்ந்து படம் பார்த்தனர். விக்ரம் & துருவ் விக்ரம் உடன் மிருணாளினி ரவி, ஶ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி ஆகியோர் தியேட்டருக்கு வந்திருந்தனர்.

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் பாடல்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியுள்ளது.‌ மேலும் இந்த படம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read | விஜய் - லோகேஷ் இணையும் தளபதி 67..‌ படத்தில் இணைந்த பிரபல இயக்குனர்! இவர் தானா?

COBRA FDFS : பிரபல தியேட்டரில் ரசிகர்களுடன் ஆரவாரமாக கோப்ரா படம் பார்த்த விக்ரம் & துருவ்.. வைரல் VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Chiyaan Vikram Dhruv Vikram watching Cobra Fdfs at Rohini Silver Screen

People looking for online information on Chiyaan Vikram, Cobra, COBRA FDFS, Dhruv Vikram, Rohini Silver Screen, Vikram will find this news story useful.