Breaking: ‘இமைக்கா நொடிகள்’ இயக்குநருடன் விக்ரம் இணையும் படம் குறித்த முக்கிய தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Sep 10, 2019 05:03 PM
‘கடாரம் கொண்டன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து, சீயான் விக்ரமை வைத்து ‘விக்ரம் 58’ என்ற திரைப்படத்தை இயக்கவிருக்கிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ‘விடியும் முன்’, ‘இறுதிச்சுற்று’, ‘இறைவி’, ‘கோலமாவு கோகிலா’, ‘NGK’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் வரும் செப்.21ம் தேதி முதல் சென்னையில் தொடங்கும் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஆர்.எஸ்.விமல் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘மஹாவீர் கர்ணா’,மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவிருக்கும் சரித்திர காவியமான ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட திரைப்படங்களில் விக்ரம் நடிக்கவிருக்கிறார்.