www.garudabazaar.com

நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி விஜய் டிவி நிகழ்ச்சி... வைரலாகும் புதிய வீடியோ...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சித்ரா. குமரன், முல்லை ஜோடிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. இவர் சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் பாசிட்டிவான குணம் கொண்ட சித்ரா, இப்படி செய்திருக்க வாய்ப்பே இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்தனர். எதனால் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வந்ததில், நேற்றையதினம் சித்ராவின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

chitras last vijay tv show promo makes fans emotional

வாழ்க்கையில் மிகவும் சுறுசுறுப்பான, நேர்மறையான நபர்களில் ஒருவராக கருதப்பட்ட நடிகை சித்ரா இறந்த செய்தி நம்மில் பெரும்பாலானோரை சிதறடித்தது. அவர் இறப்பதற்கு சற்று முன்னர் தான், விஜய் டிவியின் இரண்டு நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக கூறப்படுகிறது. இதில் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியும் ஒன்று. இப்போது விஜய் டிவி தனது பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் அவர் ரசித்து பங்கேற்ற அந்த நிகழ்ச்சியின் புதிய புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. டிசம்பர் 20-ம் தேதி இரவு 8 மணிக்கு விஜய் டிவியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. ரசிகர்கள் இந்த புரோமோவைப் பார்த்து கலங்கி வருகின்றனர்.

நடிகை சித்ரா பங்கேற்ற கடைசி விஜய் டிவி நிகழ்ச்சி... வைரலாகும் புதிய வீடியோ...! வீடியோ

chitras last vijay tv show promo makes fans emotional

People looking for online information on Chitra, Start music will find this news story useful.