என்னுடைய அம்மா மாஸ்க் தைத்து கொடுத்தாரா? டிவிட்டரில் தெளிவுபடுத்திய நடிகர் சிரஞ்சீவி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்குப் புதுவருடமான யுகாதி பண்டிகையன்று டாலிவுட் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி டிவிட்டரில் இணைந்தார். கரோனா பிரச்னையால் பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு நிதியுதவி செய்த விஷயங்கள் உள்ளிட்ட அவரது எல்லா ட்வீட்களையும் ரசிகர்கள் பாராட்டி தங்கள் மனம் கவர்ந்த நாயகனை வாழ்த்தி வருகிறார்கள்.

மாஸ்க் குறித்து தெளிவுபடுத்திய நடிகர் சிரஞ்சீவி|Chiranjeevi Clarifies On His Mom Stitching Masks

இந்நிலையில் சிரஞ்சீவியின் அம்மா கொரோவானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாஸ்க் தைத்து கொடுப்பதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகியது. அதை தெளிவுபடுத்தும் விதமாக அந்த போட்டோவுடன் சிரஞ்சீவி கூறியது, ‘என்னுடைய அம்மா இத்தகைய மனிதாபினான செயல்பாடுகளை செய்துவருவதாக சில மீடியாக்களும் சேனல்களும் செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் இது என்னுடைய அம்மா இல்லை, ஆனால் எந்த அம்மாவாக இருந்தால் என்ன? இவர்களின் இந்த கருணையான செயல் மிகவும் பாராட்டுதல்களுக்கு உரியது’ என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

இந்த ட்வீட் பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

சிரஞ்சீவி இந்த லாக் டவுன் சமயத்தில் தனது சுயசரிதையை எழுதி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Entertainment sub editor