கமல்ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2’-வில் இந்த கெட்டப்பில் அசத்தும் பாபி சிம்மா..!
முகப்பு > சினிமா செய்திகள்By Vijayabalan | Nov 08, 2019 09:48 AM
ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வரும் படம் இந்தியன் 2. கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
ரத்னவேலு இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி ஷங்கர் வித்யூத் ஜாம்வால், டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
லைக்கா புரொடக்சன் சார்பாக சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார்.‘இந்தியன் 2’ திரைப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் பாபி சிம்மா காவல் அதிகாரியாக நடிக்கின்றார் என்று எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.