தல அஜித் எப்ப கூப்பிடாலும் நான் ரெடி ..! பிஜிலி ரமேஷ் கலக்கல் வீடியோ இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Gokul | Aug 30, 2019 09:19 AM
சமூக வலைதளங்களின் மூலம் பிரபலமான பிஜிலி ரமேஷ் தற்போது யோகி பாபு கோபி சுதாகர் யாஷிகா ஆனந்த் நடிக்கும் 'ஜாம்பி' படத்தில் நடித்துள்ளார்.

சமீப காலமாக யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி பலரும் பிரபலமாகி வருகின்றனர். அப்படி பிரபலமானவர்களில் முக்கியமானவர் ரஜினிகாந்தின் ரசிகரான பிஜிலி ரமேஷ். இவரது பேச்சை பலர் டப்ஸ்மேஷ் செய்தும் வெளியிட்டு வந்தனர். இதையடுத்து யூடியூப் வீடியோக்களில் நடிகராக வலம் வந்த பிஜிலி ரமேஷ் கோலமாவு கோகிலா படக்குழுவினர் வெளியிட்டிருந்த புரமோஷன் வீடியோ ஒன்றில் நடித்திருந்தார். அதில் கபிஸ்கபா என்ற ஜிப்ரிஷ் பாடலில் தோன்றியிருந்தார்.
இதைத்தொடர்ந்து பல முன்னணி படங்களில் நடித்துவரும் பிஜிலி ரமேஷ் Behindwoods தளத்திற்கு அளித்த பிரத்யேக பேட்டியில் ரஜினியுடன் ஒரே ஒரு சீனில் நடத்திவிட்டு உயிரை விட்டாலும் சந்தோஷம் எனக் கூறினார். அதைத்தொடர்ந்து நடிப்பைத் தாண்டி நடனம் ஆடுவதில் தான் அதிக கஷ்டம் இருக்கிறது எனவே நடனமாட என்னை அழைக்காதீர்கள் என்று கிண்டலாக கூறினார்.
நட்பே துணை படத்தில் ஒரே ஒரு சீனில் தான் என்னை நடிக்க கூப்பிட்டாங்க அந்த சீன் பிடித்துப்போய் ஆதி ஹிப்ஹாப் ஆதி அண்ணன் என்னை பல படங்களில் சிபாரிசு செய்துள்ளார் எனக்கூறி கண்கலங்கினார் பிஜிலி ரமேஷ். மேலும் இளைய தளபதி பிகில் படத்தில் ஒரு சீன் கொடுத்தாலும் நல்லாத்தான் இருக்கும் ஆனால் படம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டார். தல அஜித்தை பற்றி கேட்டபொழுது அவரைப் பற்றிக் கூறவேண்டும் அவர் எப்போ கூப்பிட்டாலும் அவர் படத்தில் நடிக்க தயார் என்றார்.
தல அஜித் எப்ப கூப்பிடாலும் நான் ரெடி ..! பிஜிலி ரமேஷ் கலக்கல் வீடியோ இதோ வீடியோ