KAAPAN USA OTHERS

“சிங்கப்பெண்களுக்கு மத்தியில் சிங்கமா நம்ம தளபதி” - இதை சொன்னது இவர் தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் நடித்துள்ள ‘பிகில்’ திரைப்படத்தில் கலந்துக் கொண்ட படத்தின் பாடலாசிரியர் விவேக், தளபதி விஜய் குறித்தும், தனது குடும்பத்தில் இருக்கும் சிங்கப்பெண்கள் குறித்தும் பிகில் இசை வெளியீட்டு விழா மேடையில் பகிர்ந்துக் கொண்டார்.

Bigil Audio Launch Lyricist Vivek Thalapathy Vijay Singappenney

ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், கதிர், யோகிபாபு, விவேக், ரெபா மோனிகா, இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், சவுந்தரராஜா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மகளிர் கால்பந்து விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகி வரும் இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது, தாம்பரத்தில் உள்ள சாய் ராம் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழா வரும் ஞாயிற்றுக் கிழமை மாலை 6 மணிக்கு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய பாடலாசிரியர் விவேக்,  “பிகில் படத்தில் சிங்கப்பெண்களுக்கு மத்தியில் சிங்கமாக தளபதி விஜய் வாழ்ந்திருக்கிறார். ஒரு மாஸ் ஹீரோ தனக்கான இடத்தை மாத்தி அமைச்சிக்க முடியும். என்னோட வாழ்க்கைல சிங்கப்பெண் என் மனைவி, அம்மா.. என் அம்மா உயர்நீதிமன்ற நீதிபதியா இருந்து ஓய்வு பெற்றவங்க.. அவங்க ஓய்வு பெற்ற பிறகு ஒரு நிலம் வாங்கினோம் கடன் வாங்கி வாங்கினோம்.. லஞ்சம் வாங்காமல் நேர்மையா என் அம்மா பணியாற்றியது பெருமையா இருக்கு. எங்க அம்மா நீதிபதியாக என் அப்பா வேலையவிட்டுட்டு உறுதுணையா இருந்தாங்க” என்றார்.

இயக்குநர் அட்லி குறித்து பேசுகையில், “ஆமா அழுக்கா இருப்போம், கருப்பா கலையா இருப்போம்.. கருப்பு அழகு இல்லன்னு யாரு சொன்னா? எனக்கு ஒரே ஒரு ஆசை, அவர் வெறித்தனமா உழைக்குறத எல்லாரும் நேர்ல பார்க்கணும்”

பிகில் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின் சுவாரஸ்ய நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இணைந்திருங்கள்.