Annatha Others ua
Jai been others
www.garudabazaar.com

"இது Serious-ஆ போய்ட்டு இருக்கு!".. "நான் தான் வொர்ஸ்ட்டா?".. நிரூப் - பாவனி வாக்குவாதம்! #biggbosstamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் நிரூப் மற்றும் பாவனி இருவருக்குமிடையே வெடித்த மோதல் வைரலாகி வருகிறது.

biggbosstamil5 pavani niroop heated argument பிக்பாஸ்

தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் நிரூப், ஆளுமை செலுத்தி வருகிறார். இதற்கு காரணம் நிலத்தின் ஆற்றலுக்கான நிரூப் கைப்பற்றியது தான். நடந்து முடிந்த காயின் டாஸ்க்கில், நிலத்தின் ஆற்றலுக்கான நாணயத்தை நிரூப் கைப்பற்றியதை தொடர்ந்து, பிக்பாஸ் வீட்டின் பெட்ரூம் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார் நிரூப்.

அவருக்கு உதவியாளராக அக்‌ஷரா தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார். நிரூப்பிடம் யார்  எந்த விஷயம் கேட்க வேண்டும் என்றாலும், அக்ஷரா மூலமாதான் கேட்கவோ சொல்லவோ முடியும். அக்‌ஷரா நிரூப்பின் கட்டளைகளை ஹவுஸ்மேட்ஸிடையே கொண்டு செல்வார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் நிரூப் மற்றும் பாவனி, நேரடியாக மோதிக் கொண்டுள்ளனர்.

ஆம், நிரூப் மற்றும் அக்‌ஷராவின் பேச்சு சண்டையாக பிக்பாஸ் வீட்டுக்குள் வெடித்தது. ஒரு காரணம் சொல்லி தான் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் தூங்குவதற்கு கட்டளையிட முடியும் என பெட்ரூமில் ஆளுமை செலுத்தும் நிரூப் பாவனியிடம் கூற, அதற்கு, “அப்ப சரியான காரணம் சொல்லுங்க” என்று பாவனி கொதிக்கிறார்.

முன்னதாக பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்த அனைவரும் மாறு வேடங்களை போட்டுக் கொண்டு வலம் வந்தனர். அவ்வப்போது இந்த வேடங்களை கலைத்து மீண்டும் போட்டுக் கொள்கின்றனர். திரைப்படங்களில் மிக முக்கிய கேரக்டர்களான நீலாம்பரி, சந்திரமுகி, அந்நியன் உள்ளிட்ட பல கேரக்டர்களை பிக்பாஸ் போட்டியாளர் வேடமாக தரித்துக் கொண்டுள்ளனர்.

இதில் பாவனி, கஜினி வேடத்தை சரியாகப் பார்க்காமல் கேவலமாக போட்டிருந்ததாக, அந்நியன் வேடமிட்டிருந்த நிரூப் குற்றம் சாட்டுகிறார். அப்போது பாவனி, “இது மிகவும் சீரியஸாக போய்க்கிட்டிருக்கு”! என்று எச்சரிக்கிறார்.

குறிப்பாக இந்த கேரக்டர்களில் இருக்கும் பொழுது அதிலிருந்து குறிப்பிட்ட போட்டியாளர் விலகி வெளியேசெல்லக் கூடாது என்பது விதி. இதனை நிரூப் சுட்டிக்காட்ட, அதற்கு பாவனி, “இந்த வீட்டில் எல்லாத்துக்கும் என்னுடைய பெயர் கிடைத்து விட்டது. யார் வொர்ஸ்ட்டாக பெர்ஃபார்மென்ஸ் பண்ணியது என்றாலும் நான் தான்” என்று தனது சகாக்களிடம் புலம்பினார்.

biggbosstamil5 pavani niroop heated argument பிக்பாஸ்

People looking for online information on Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Niroop, Pavani BiggBossTamil5, Pavaniarmy, PavaniReddy, VijayTelevision will find this news story useful.