www.garudabazaar.com

கேபியுடன் ‘அப்பா’ படத்துல நடிச்ச பொண்ணா இது?.. இப்ப எப்டி இருக்காங்க பாருங்க.. புது பட அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சிலந்தி, ரணதந்த்ரா (கன்னடம்), அருவா சண்ட ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆதிராஜன்.

biggboss gabi co actress in appa yuvalakshmi new film update

இவரது இயக்கத்தில் லேகா தியேட்டர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராயல் பாபு தயாரிக்கும் படம் ‘நினைவெல்லாம்  நீயடா’. இசைஞானி இளையராஜா இசையில் 1417வது படமாக உருவாகும் இந்த படத்தின் கதாநாயகனாக விஜய் டிவியின் காதலிக்க நேரமில்லை, சின்னத்தம்பி ஆகிய சீரியல்களில் நாயகனாக நடித்த பிரஜன் நடிக்கிறார்.

அண்மையில்தான் சின்னத்தம்பி சீரியல் முடிவடைந்தது. நடிகர் பிரஜின் ஏற்கனவே திரௌபதி, ருத்ர தாண்டவம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவான பழைய வண்ணாரப்பேட்டை திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் தான் நினைவெல்லாம் நீயடா எனும் இந்த புதிய படத்தில் நடிக்கிறார். 

தவிர, இந்த படத்தின் கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகை நடிக்க, மற்றொரு நாயகியாக புதுமுகம் சினாமிகா அறிமுகமாகிறார். மேலும் இப்படத்தில் மனோபாலா, காளி வெங்கட், மதுமிதா, ரஞ்சன்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர். இவர்கள் தவிர முக்கிய வேடத்தில் சமுத்திரகனியின் ‘அப்பா’ திரைப்படத்தில் நடித்த யுவலஷ்மி நடிக்கிறார். இவருடன் தோழியாக மூக்குத்தி அம்மன் புகழ் அபிநயஸ்ரீ நடிக்கிறார்.

சமுத்திரகனி இயக்கி தயாரித்த அப்பா திரைப்படத்தில் காக்கா முட்டை படத்தில் பெரிய காக்கா முட்டையாக நடித்த விக்னேஷ், தற்போது பிக்பாஸ் மூலம் பிரபலமான கேப்ரியல்லா ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களுடன் நடித்தவர் தான் யுவலஷ்மி.

கேபி தற்போது பிக்பாஸ் ஜோடி, விளம்பர படங்கள் என பிஸி ஆகிவிட்டார். இந்நிலையில் தான் கேபியுடன் அப்பா படத்தில் இணைந்து நடித்த இளம் நடிகை யுவலஷ்மி, ‘நினைவெல்லாம் நீயடா’ எனும் இந்த படத்தில் நடிக்கிறார். 

முன்னதாக அமலா பால் நடித்த ‘அம்மா கணக்கு’ திரைப்படத்தில் யுவலஷ்மி அமலா பாலுக்கு மகளாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இன்னும் நன்றாகவே வளர்ந்துவிட்ட யுவலஷ்மி ‘நினைவெல்லாம் நீயடா’ படக்குழுவினருடன் இருக்கும் புகைப்படமும் வைரலாகி வருகிறது.

இந்த படத்திற்கு "பியார் பிரேமா காதல்" பட ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி  ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களை பழநிபாரதி, சினேகன் ஆகியோர்  எழுத, நடன பயிற்சிகளை பிருந்தா, தினேஷ், தீனா அளிக்கின்றனர்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பாடல்கள் பாண்டிச்சேரி, கூர்க், இடுக்கி ஆகிய இடங்களில் படமாக்கப்பட இருக்கிறது.

Also Read: சூர்யா படத்துல வந்த மாதிரியே... நிஜமாகவே போதை வழக்கில் சிக்கிய சிங்கம்-2 டேனியின் கூட்டாளி!..

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

biggboss gabi co actress in appa yuvalakshmi new film update

People looking for online information on Amma Kanakku, Appa, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Gabriella Charlton, Samudrakani, VijayTelevision, Yuvalakshmi will find this news story useful.