www.garudabazaar.com

அட..! - பல்சர் பைக்கில் சிட்டாக பறக்கும் பிக்பாஸ் நடிகை.! கலக்கும் வைரல் வீடியோ.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் போட்டியில் பிரபலமடைந்த நடிகை, பைக் ஓட்டி அசத்தும் வீடியோ இணையத்தில் ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

பைக் ஓட்டி அசத்தும் பிக்பாஸ் நடிகையின் வீடியோ | BiggBoss Fame Actress Madhumitha bike riding video goes viral

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக கலக்கி வருபவர் மதுமிதா. சந்தானத்துடன் இவர் ஜோடி சேர்ந்து கலக்கிய ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் மூலம் இவர் பிரபலமானார். மேலும் இவர், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா., டீமான்டி காலனி உள்ளிட்ட படங்களில் தனது காமெடியால் கலக்கினார். இதை தொடர்ந்து இவர் பிக்பாஸ் போட்டியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர்ந்தார்.

பைக் ஓட்டி அசத்தும் பிக்பாஸ் நடிகையின் வீடியோ | BiggBoss Fame Actress Madhumitha bike riding video goes viral

இந்நிலையில் நடிகை மதுமிதா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அண்மையில் பைக் ஓட்ட கற்று கொண்ட அவர், நேர்த்தியாக அதில் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்துள்ளார். இதுகுறித்த அவரது பதிவில், ''பைக் ஓட்டுறது அவ்ளோ பெரிய விஷயமா?? இல்லை, அதைக் கற்றுக்கொள்ள நினையாமலிருப்பது பெரிய விசயம் எனப் புரிந்துகொண்டேன். கற்றுக்கொண்டேயிருப்பதில், இப்போது இதுவும் ஒன்று!'' என அவர் பதிவிட்டுள்ளார். மதுமிதாவின் இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

 

பைக் ஓட்டி அசத்தும் பிக்பாஸ் நடிகையின் வீடியோ | BiggBoss Fame Actress Madhumitha bike riding video goes viral

People looking for online information on BIGGBOSS TAMIL, Bike Riding, Madhumitha will find this news story useful.