www.garudabazaar.com

இந்த வாரம் 'அவங்க' லிஸ்ட்ல வரவே இல்லையே... அப்போ யாரா இருக்கும்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் போட்டியாளராக ரேகா வெளியேறி விட்டார். இதையடுத்து இந்த ஆட்டம் இன்னும் சூடுபிடிக்க ஆரம்பித்து இருக்கிறது. இந்த வாரத்திற்கான நாமினேஷன் நேற்று நடைபெற்றது. இதில் ஆரி, அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தி, பாலாஜி முருகதாஸ் மற்றும் ஆஜித் ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டு இருக்கின்றனர்.

Bigg Boss Tamil 4: 5 Contestants nominated for 2 week elimination

ஆனால் வீட்டில் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளனர் என விமர்சனங்களுக்கு ஆளான சோம், சம்யுக்தா இருவரும் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. மாஸ்க் டாஸ்க்கிற்கு பின் யாரும் எதிர்பாராத வகையில் ஆரியை அதிகமான பேர் நாமினேட் செய்து உள்ளனர். ஆஜித் பாஸ் வைத்து இருப்பதால் அவர் இந்த பட்டியலில் வந்தாலும் தப்பித்து விடுவார். சுரேஷ் சக்கவர்த்திக்கும் ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருக்கிறது.

இதுபோல பாலாஜியும் தப்பிக்க வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் ஆரி அல்லது அனிதா சம்பத் இருவரில் ஒருவர் பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறலாம் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ரேகா முதல் வாரம் வெளியேறுவார் சம்யுக்தா 2-வது வாரம் வெளியேறுவார் என ரசிகர்கள் தங்களது கணிப்புகளை தெரிவித்து இருந்தனர். ஆனால் சம்யுக்தா இந்த லிஸ்டில் வரவேயில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: 5 Contestants nominated for 2 week elimination

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.