‘யார் யாரு Safe இன்னைக்கு..? பெரிய சம்பவம் இருக்கு..!’- பிக் பாஸ் 3 புரொமோ
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Jul 14, 2019 08:59 PM
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடில், பிக் பாஸ் வீட்டில் இருந்து ஒருவர் வெளியேற்றப்படுவார்.

16 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் இருந்து முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு சரவணன், மீரா, வனிதா, மோகன் வைத்தியா, மதுமிதா ஆகிய 5 பேர் நாமினேட் ஆகியிருந்தனர்.
இவர்களில் நேற்றைய எபிசோட்டின் முடிவில் மோகன் வைத்தியா காப்பாற்றாப்பட்டார். அதனால் மீதமுள்ள 4 பேரில் இருந்து ஒருவர் இன்று வெளியேறக் கூடும் என்ற நிலையில், இன்றைய எபிசோடிற்கான புரொமோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதில், மக்கள் கணித்தது போல், மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் ஒரு புரொமோவில் தெரிவிக்கிறார். அதனைத் தொடர்ந்து வெளியான புரொமோவில் 3 பேரில் ஒருவர் காப்பாற்றப்படுகிறார், அவரது பெயர் இருக்கும் கார்டு ஒன்று பிக் பாஸ் வீட்டிற்குள் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக கமல்ஹாசன் கூறுகிறார்.
அதையடுத்து, போட்டியாளர்கள் அதனை தேட, சரவணன் ஒரு கார்டை கண்டுப்பிடிக்கிறார். அதில் அவரது பெயர் இருந்ததால் மகிழ்ச்சியடைகிறார். அவர் கூறுகையில், ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளை விட்டுட்டு வந்திருக்கேன் என்றதும் அரங்கமே அதிர்கிறது.
ஆக மீதமுள்ள மீரா மற்றும் வனிதா ஆகிய இருவரில் ஒருவர் இன்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
‘யார் யாரு SAFE இன்னைக்கு..? பெரிய சம்பவம் இருக்கு..!’- பிக் பாஸ் 3 புரொமோ வீடியோ