பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆர்.ஜே வைஷ்ணவி. இவர் சமீபத்தில் விமானி அஞ்சன் என்பவரை ஆடம்பரம் இல்லாத எளிய முறையில் திருமணம் செய்துக் கொண்டார்.
வைஷ்ணவியும், அவரது கணவர் அஞ்சனும் Behindwoods-ன் Personals வித் தாரா நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு பிக் பாஸ் குறித்தும், அவர்களது காதல் திருமணம் குறித்தும் பகிர்ந்துக் கொண்டனர்.
பிக் பாஸ் சீசன் 3 பற்றி பேசிய வைஷ்ணவி, ‘24 மணிநேரத்தில் தூங்கும் 8 மணிநேரத்தை தவிர்த்து மீதமுள்ள நேரத்தில் நடக்கும் விஷயங்களை வெறும் 1.30 மணிநேரத்தில் காட்டும்போது ஒருவரின் குணாதிசியங்களை எப்படி தெரிந்துக் கொள்ள முடியும்? பிக் பாஸ் வீட்டில் 64 நாட்கள் இருந்திருக்கேன், வெளியே வரும்போது ஆஹா இவங்க இப்படி அவங்க அப்படின்னு தெரிஞ்சது. ஆக பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்த ஒருவாரத்தில் யாரையும் யாரும் எப்படிப்பட்டவர்கள் என்று கணித்துவிட முடியாது’.
தனது காதல் கணவர் பற்றி பேசுகையில், ‘3 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்துக் கொண்டோம். அம்மாக்கிட்ட சொல்லிட்டு தான் இவருடன் டேட்டிங் சென்றேன். முதல் ஓராண்டில் கழட்டிவிட்டா என்ன பண்றது என்ற கலக்கம் இருவருக்கும் இருந்தது. என் பிறந்தநாளுக்கு நான் அடிக்கடி பயன்படுத்தும் Girl Friends Manual ஒன்றை அவராகவே டிசைன் செய்து கிஃப்ட் பண்ணினார். அதை பார்த்து திகைச்சு போயிட்டேன்’ என்றார்.
‘பிக் பாஸ் 3 ஆரம்பிச்ச ஒரு வாரத்துல...’ - பிக் பாஸ் பிரபலம் வீடியோ