பிக்பாஸ் பிரபலம் குழந்தையின் ஃபோட்டோவை வெளியிட்டு உருக்கம் - ''என் மகளுக்கு பிறந்து 9 மாசம்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ராதா மோகனின் 'அபியும் நானும்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் கணேஷ் வெங்கட்ராமன். தொடர்ந்து கமல்ஹாசனின் 'உன்னைப் போல் ஒருவன்', ஜெயம் ரவியின் 'தனி ஒருவன்' உள்ளிட்ட படங்களின் மூலம் கவனம் ஈர்த்தார். இவர் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் நிஷாவை திருமணம் செய்துகொண்டார்.

Bigg Boss fame Ganesh Venkatraman shares about his daughter turning 9 months | தன் மகளின் புகைப்படத்தை பகிர்ந்து பிக்பாஸ் கணேஷ் வெங்கட்ராமன்

அதனைத் தொடர்ந்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக்பாஸ் சீசன் 1' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் தன் தன்னம்பிக்கையால் இறுதிச்சுற்றுவரை வந்தார். இந்த நிகழ்ச்சியில் மூலம் மிகவும் பிரபலமானவராக அறியப்படுகிறார்.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மகளுடன் இருக்கும் ஃபோட்டோவை பகிர்ந்துள்ள அவர், ''என்னுடைய மகள் 9 மாதங்களை நிறைவு செய்துள்ளார். எங்கள் வாழ்க்கையில் கொண்டாட்டத்தையும் மகிழ்ச்சியையும் கொண்டு வந்துள்ளார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor