இந்த ஃபோட்டோல இருக்கிற ஹீரோயின் யார் தெரியுதா ? - கண்டுபிடிங்க பார்க்கலாம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் காரணமாக பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை உள்ளது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் வித்தியாசமான டாஸ்க்குகள் டிரெண்டாகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக Saree Challenge என்ற பெயரில் பிரபலங்கள் தங்கள் புடவையில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட, அவை அவ்வப்போது வைரலாகி வருகிறது.

Bigg Boss fame actress sherin shares her Childhood photo | பிக்பாஸ் புகழ் நடிகை ஷெரின் தனது சிறுவயது ஃபோட்டோவை வெளியிட்டார்

மேலும் பிரபலங்கள் தங்கள் சிறுவயது புகைப்படங்களை வெளியிடுவது டிரெண்டாகி வருகிறது. அந்த வகையில் நடிகை ஷெரின் தனது அம்மா, அப்பாவுடன் இருக்கும் ஃபோட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், நாங்கள் இணைந்து இருக்கும் நிலையில்  இந்த ஃபோட்டோ மட்டும் தான் என்கிட்ட இருக்கிறது. என்று தெரிவித்துள்ளார்.

நடிகை ஷெரின் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷூடன் இணைந்து 'துள்ளுவதோ இளமை' படத்தில் அறிமுகமானார். பின்னர் பல்வேறு படங்களில் நடித்த அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அந்த நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

Entertainment sub editor