www.garudabazaar.com

'உப்பு' போட்டு சோறு திங்குற எவனும்... திடீரென 'பொங்கி' எழுந்த போட்டியாளர்... என்ன ஆச்சு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டின் ராசிப்படி கிச்சனில் இருந்து தான் ஒவ்வொரு சீசனிலும் முதல் சண்டை ஆரம்பமாகிறது. இந்த சீஸனும் அதற்கு விதிவிலக்கல்ல. கடந்த சில நாட்களாக அனிதா-சுரேஷ் சக்கரவர்த்தி இடையிலான உரசல்கள் சண்டையாக உருவெடுக்க ஆரம்பித்து இருக்கின்றன. இதனால் எல்லா ப்ரோமோவிலும் இருவரும் கட்டாயம் இடம் பெறுகின்றனர்.

Bigg Boss 4: Suresh Chakravarthy Wants to Change the Team

இந்த நிலையில் நேற்றும் வழக்கம்போல உரசல்கள் நிகழ சுரேஷ் பொங்கி எழுந்து விட்டார்.  அவர் கேப்டன் ரம்யாவிடம் சென்று இதற்கு மேல் நான் குக்கிங் டீமில் இருக்க முடியாது. நான் நன்றாக டாய்லெட் கிளீன் செய்வேன் எனவே அந்த டீமுக்கு என்னை மாற்றி விடுங்கள் என கோரினார். இதற்கு ரேகா, சனம் உள்ளிட்ட சக டீம்மேட்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

நீங்கள் போகக்கூடாது என சனம் சொல்ல எனக்கு உங்களுடன் எந்த பிரச்சினையும் இல்லை இந்த மேடத்துடன் தான் பிரச்சினை என அனிதாவை காட்டுகிறார். தொடர்ந்து உப்பு போட்டு சோறு சாப்பிடுற எவனும் அந்த டீமில் இருக்க மாட்டான் என கோபமாக சொல்லுகிறார். அவர் வேறு டீமிற்கு மாற்றப்படுவாரா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். குக்கிங் டீமில் தற்போது அனிதா, சுரேஷ், ரேகா, சனம் ஷெட்டி ஆகிய நால்வரும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss 4: Suresh Chakravarthy Wants to Change the Team

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.